நாசா பகிர்ந்த ஃபோட்டோ.. "இது.. அதோட கால்தடம் மாதிரியே இருக்கே.." அரண்டு போன நெட்டிசன்கள்
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா, சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

விண்வெளி நிறுவனமான நாசா, அவ்வப்போது விண்வெளி, கிரகங்கள், கோள்கள் உள்ளிட்டவை தொடர்பான புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆராய்ச்சி விண்கலன்கள் மற்றும் மேலும் பல கருவிகளுடன், சில கிரகங்களில் உள்ள புகைப்படங்களை வெளியிடும் போது, மக்களை வியக்க வைக்கும் அளவுக்கும் அவை இருக்கும்.
செவ்வாய் கிரகத்தின் புகைப்படம்
அந்த வகையில் தான், தற்போது ஒரு புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் இருந்து, புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ள நிலையில், இதனைக் கண்ட நெட்டிசன்கள் வாயை பிளந்து அதனை பார்த்து வருகின்றனர். செவ்வாய் கிரகத்திலுள்ள Crater புகைப்படங்கள் தான் அவை. பொதுவாக, நிலா, கிரகம், கோள்கள் என அனைத்திலும் அதிகம் குழிகள் காணப்படும். அப்படி அவற்றில் தோன்றும் குழிகளை 'Crater' என குறிப்பிடுவார்கள்.
அதி நவீன கேமரா
அப்படி, செவ்வாய் கிரகத்திலுள்ள ஒரு குழியின் புகைப்படம் ஒன்றை தான் தற்போது நாசா வெளியிட்டுள்ள்ளது. செவ்வாய் கிரகத்திலுள்ள நாசாவின் Mars Reconnaissance Orbiter-ல் அமைந்துள்ள High-Resolution Imaging Science Experiment (HiRISE) என்னும் அதி நவீன கேமரா மூலம், இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், செவ்வாய் கிரகத்தில் அமைந்திருக்கும் இந்த குழிகள், சரியாக ஜீரோ டிகிரி தீர்க்கரேகையில் அமைந்துள்ளது. அதே போல, செவ்வாய் கிரகத்தின் Crater புகைப்படம், ஒரு பிக்சலுக்கு 50 செ.மீ என்ற அளவில் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, புகைப்படத்தில் நாம் பார்ப்பதை விட, நிஜத்தில் இந்த குழி பல மடங்கு பெரிதாக இருக்கும் என கூறப்படுகிறது.
அரண்டு போன நெட்டிசன்கள்
நாசா இந்த செவ்வாய் கிரகத்தின் புகைப்படத்தினை வெளியிட்டதும், அதனைக் கண்ட நெட்டிசன்கள் அரண்டு போனார்கள். செவ்வாய் கிரகத்தில் பெரிய ஏலியனின் கால்தடம் போல இந்த குழிகள் இருப்பதாக குறிப்பிட்டு வருகின்றனர். இன்னும் சிலர், ஏதோ பெரிய உருவம் அந்த வழியாக சென்றதன் தாக்கம் என்றும் இந்த 'Crater'களை குறிப்பிடுகின்றனர்.
ஒட்டுமொத்த நெட்டிசன்களும் இதனைக் கண்டு மெய் சிலிர்த்து போயுள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
