என்ன ஆனாலும் அந்த 'சிக்கன' சாப்ட்டே ஆகணும்... 32 கி.மீ டிராவல் செய்தவருக்கு... காத்திருந்த 'உச்சக்கட்ட' அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > உலகம்சிக்கன் சாப்பிட 32 கிலோ மீட்டர் பயணம் செய்தவருக்கு 86 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

உலகை தன்னுடைய இஷ்டத்துக்கு ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸால் இதுவரை 1.42 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் அமெரிக்கா முதல் இடமும் பிரேசில், இந்தியா ஆகியவை அடுத்தடுத்த இடத்தையும் பிடித்துள்ளன.
ஆஸ்திரேலியா நாட்டிலும் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் அந்நாட்டில் தற்போது ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மெல்போர்ன் நகரை சேர்ந்த ஒருவருக்கு பட்டர் சிக்கன் சாப்பிட வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது.
இதையடுத்து தான் வழக்கமாக சாப்பிடும் இடத்துக்கு அவர் சென்றிருக்கிறார். சுமார் 32 கிலோ மீட்டர் வரை அவர் சென்ற நிலையில் வழியில் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, ஊரடங்கு விதிகளை மீறியதற்காக 86 ஆயிரத்து 582 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
