ஹிந்தி தொடங்கி தமிழ் வரை ஏராளமான மொழிகளில் பாடி, தன்னுடைய இனிமையான குரலால், எக்கச்சக்க ரசிகர்களை உருவாக்கிக் கொண்டவர் கிருஷ்ணகுமார் குன்னத் என்கிற KK.

தமிழில் மட்டும், சுமார் 60 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள கேகே, மெலோடி, குத்துப் பாடல் என அனைத்து ஏரியாவிலும் பட்டையைக் கிளப்பி உள்ளார்.
கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கேகேவிற்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, அவர் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறியதாக தகவல்கள் கூறப்படுகின்றன. மாரடைப்பின் காரணமாக கேகே உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
ரிப்போர்ட் சொல்வது என்ன?
கேகே உடலை ஆய்வு செய்து பார்த்த போது, அவரின் உடல்நிலை குறித்து பல தகவல்கள், தற்போது வெளியாகி உள்ளது. கேகேவின் இடது தமினியில் 80 சதவீத அடைப்புகள் இருந்ததும் தெரிய வந்தது. தனது இதயத்தில் நிறைய பிளாக்குகள் இருந்தது கூட தெரியாமல் தான், கேகே இருந்து வந்ததாகவும், அடிக்கடி நெஞ்சு எரிச்சல் அதிகம் இருந்ததன் பெயரில், Antacids எடுத்துக் கொண்டதும் தெரிய வந்துள்ளது.
மனைவிக்கு அழைத்த கேகே
இதயத்தில் பிரச்சனை உள்ளது, முன்பே தெரிந்திருந்தால், திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை தவிர்க்கக் கூட செய்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. கேகே தங்கி இருந்த விடுதியில் கூட, நிறைய Antacids மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதே போல, கொல்கத்தா இசை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக, தனது மனைவியிடம் பேசிய கேகே, கை மற்றும் தோள் பட்டை ஆகிய பகுதிகள் வலிப்பது பற்றி பேசி உள்ளார்.
காரணம் இது தான்..
கொல்கத்தா இசை நிகழ்ச்சியில், தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் வரை பாட்டு பாடி வந்ததால், இதயத்திற்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் நிறுத்தப்பட்டதால் தான் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அதே போல, கேகேவின் மறைவுக்கு மாரடைப்பு தான் காரணம் என்றும், வேறு எந்தவொரு காரணமும் இல்லை என்றும் மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்
