உலக புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை உடைக்க பாய்ந்த பாட்டி.. பாதியிலேயே பறந்த விக்.. கோவத்துல செஞ்ச காரியத்தால் அதிர்ந்துப்போன அதிகாரிகள்..வைரல் வீடியோ.!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | May 31, 2022 05:49 PM

உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை ஒருவர் உடைக்க முயற்சித்த சம்பவம் பிரான்ஸ் நாட்டையே அதிரவைத்துள்ளது.

Man disguised as woman smears Monalisa painting

Also Read | தமிழகத்தில் இன்றுமுதல் தென்மேற்கு பருவமழை துவக்கம்.. எந்தெந்த மாவட்டங்களில் மழை அதிகம் பெய்யும்? வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை..!

மோனலிசா ஓவியம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலகின் மிகப் பெரிய லூவ்ரே அருங்காட்சியகம் உள்ளது. இங்கு இத்தாலியை சேர்ந்த பிரபல ஓவியரான லியனார்டோ டாவின்சி வரைந்த மோனாலிசா ஓவியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதன் மதிப்பு பல்லாயிரம் கோடிகளாகும். இதனாலேயே இந்த ஓவியத்தைப் பார்க்க உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாவாசிகள் இந்த அருங்காட்சியத்திற்கு வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம், வழக்கம்போல லூவ்ரே அருங்காட்சியகம் சுற்றுலாவாசிகளால் நிரம்பி வழிந்தது. அப்போது சக்கர நாற்காலியில் வயதான பாட்டி ஒருவர் வந்தார். மோனலிசா ஓவியம் இருந்த இடத்திற்கு அருகில் வந்ததும் அவர் எழுந்துநின்று தனது விக்கை கழற்றி வீசவே அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Man disguised as woman smears Monalisa painting

தாக்குதல்

வீல் சேரில் பாட்டி போன்று வேஷமிட்டு வந்திருந்த அவர், மோனாலிசா ஓவியத்தை உடைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், குண்டு துளைக்காத கண்ணாடியால் ஓவியம் பாதுகாக்கப்பட்டு வருவதால் அவரது முயற்சி பலிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, தான் கொண்டுவந்திருந்த கேக்கை கண்ணாடி மீது பூசினார் அந்த நபர். இது அங்கிருந்த மக்களை அதிர வைத்தது.

கேக் பூசப்பட்ட நிலையுடன் இருந்த மோனலிசா ஓவியத்தை அங்கிருந்த நபர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட அது தற்போது வைரலாகியிருக்கிறது.

Man disguised as woman smears Monalisa painting

முழக்கம்

மோனலிசா ஓவியத்தின்மீது கேக்கை பூசிய பிறகு, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின்மீது ரோஜா இதழ்களை தூவிய அந்த நபர்," பூமியை மக்கள் சிலர் அழிக்கின்றனர். பூமியை பற்றி சிந்தியுங்கள்" என்று கோஷமிட்டார். அதன்பிறகு, அவரை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றினர். இதனால் ஓவியம் பாதிப்படையவில்லை என அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

மோனலிசா ஓவியம் இப்படி தாக்குதலுக்குள்ளாவது இது முதல்முறையல்ல. 1956-ல் ஒருவர் மோனலிசா ஓவியம் மீது அமிலம் வீசியதால் அதன் கீழ்ப் பகுதி சேதம் அடைந்தது. இதன் பிறகே குண்டு துளைக்காக கண்ணாடிக்குள் ஓவியம் பாதுகாப்பாக வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பெண் வேடமிட்டு ஆண் ஒருவர் உலக புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மீது கேக்கை பூசிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | "தர்மசங்கடம் வேணாம்".. கட்சியினருக்கு உதயநிதி கோரிக்கை.. அவரே வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.!

 

Tags : #MAN #WOMAN #MONALISA PAINTING #மோனலிசா ஓவியம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man disguised as woman smears Monalisa painting | World News.