வாத்தியாரை மிரள வச்ச ஹெட்மாஸ்டர்.. PRANK-னா இப்படி இருக்கணும்.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்பள்ளி தலைமையாசிரியர் ஒருவரே சக ஆசிரியரை பிராங்க் செய்த வீடியோ தற்போது இணைய தளங்களில் தீயாக பரவி வருகிறது.
Also Read | ஈ தொல்லைக்காக ஊரையே காலிசெய்யும் கிராம மக்கள்.. கோவை அருகே சோகம். !
பிராங்க் வீடியோ
இணைய வசதி அதிகரித்த பின்னர் பிரபலமாகும் நோக்கில் பலர் வித்தியாசமான முயற்சிகளை கையில் எடுப்பது உண்டு. அவற்றுள் ஒன்றுதான் இந்த பிராங்க் என்னும் உத்தி. ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒரு நேர்த்தியான நாடகத்தை பொது இடத்தில், பொது மக்களைப் பயன்படுத்தி செய்து காட்டுவதே பிராங்க் எனப்படுகிறது. மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் இந்த பிராங்க் வீடியோக்கள் ஆரம்பத்தில் எடுக்கப்பட்டாலும் போகப்போக வரம்பு மீறிய பல காரியங்களிலும் பிராங்க் என்ற பெயரில் சிலர் நடந்து கொள்வதை நாம் இணையம் மூலமாக நன்கு அறிந்து இருக்கிறோம்.
தனிமனித சுதந்திரத்தையும் சமூக கண்ணியத்தையும் மீறும் எந்த நகைச்சுவையும் சட்டத்திற்குப் புறம்பானதே. ஆனால் தற்போது இணைய தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கும் இந்த பிராங்க் வீடியோ காண்போரை சில வினாடிகளாவது குழந்தைகளாக மாற்றிவிடும் வல்லமை கொண்டது.
ஸ்கெட்ச் போட்ட ஹெட்மாஸ்டர்
இந்த வீடியோவை ஒரு பள்ளி சிறுவனின் தாயார் காரில் அமர்ந்தவாறு எடுத்திருக்கிறார். வழக்கமாக தனது மகனை பள்ளிக்கு டிராப் செய்ய வந்த அவர் அங்கு நின்று கொண்டிருந்த தலைமையாசிரியரின் வித்தியாசமான செய்தியை பார்த்தவுடன் அதை தனது செல்போனில் வீடியோவாக எடுக்க துவங்கியுள்ளார்.
காரை விட்டு இறங்கிய சிறுவன் நடக்கத் துவங்குவதற்கு முன் அவனை தனது முதுகுக்குப் பின்னால் மறைந்து கொள்ளும்படி சொல்கிறார் அந்த தலைமையாசிரியர். அந்த சிறுவனும் அப்படியே செய்கிறான். அவர்களுக்கு கொஞ்ச தூரத்தில் மற்றொரு ஆசிரியர் ஒருவர் வேறு ஒருவரிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். முதுகுக்குப் பின்னால் இருக்கும் சிறுவன் வெளியே தெரிந்து விடாமல் இருக்க தனது கைகளை வைத்து அவனை தட்டிக் கொடுக்கிறார் தலைமையாசிரியர். இப்போது அந்த ஆசிரியரை நோக்கி தலைமையாசிரியர் நடக்க அவர் பின்னாலேயே ஒளிந்திருந்த சிறுவனும் நடக்கிறான்.
குழந்தைகள்
பக்கத்தில் சென்றவுடன் தலைமையாசிரியர் சட்டெனத் திரும்பிக் கொள்ள பின்னால் இருந்த சிறுவன் ஆசிரியரை அச்சம் கொள்ளும் வகையில் கூச்சலிடுகிறான். இதைக்கண்ட அந்த ஆசிரியர் உண்மையிலேயே பயந்து கத்துகிறார். அதன்பிறகு விஷயத்தை உணர்ந்து அவரும் சிரிக்க தலைமையாசிரியர், சிறுவன் என அங்கிருந்த அனைவருமே இதைக்கண்டு சிரிக்கின்றனர்.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒருவர் "தலைமையாசிரியருக்கு அந்த அசைன்மென்ட் குறித்து நன்கு தெரிந்திருக்கிறது. குழந்தைகளை பார்ப்பதும் குழந்தைகளாகவே இருப்பதும் என்றும் மகிழ்ச்சிக்குரியது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 20 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். ஆசிரியரைப் பிராங்க் செய்ய தலைமை ஆசிரியரே ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த இந்த வினோத பிராங்க் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8