கோவை அருகே ஈக்களின் தொல்லை தாங்க முடியாததால் ஊரையே காலி செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் ஒரு கிராம மக்கள்.
Also Read | 'வியாபாரம் இல்லாமல் தவித்த பாட்டிம்மா'.. திக்குமுக்காட வைத்த கலெக்டர்! மனச உருக வச்ச வீடியோ!
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ளது திம்ம நாயக்கன் பாளையம் என்னும் கிராமம். இங்கு கடந்த சில வாரங்களாக ஈக்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இங்கு வசித்து வரும் மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இருநூறு குடும்பங்களைக் கொண்ட இந்த கிராமத்தில் சமீபத்தில் அதிகரித்துள்ள தொல்லையால் நிம்மதியாக சாப்பிடக்கூட முடியவில்லை என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.
ஈக்களின் தொல்லையால் டீ கூட குடிக்க முடியவில்லை என்றும் வீடுகளில் உள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களிலும் ஈக்கள் நிறைந்து காணப்படுவதால் என்ன செய்வதென்றே தெரியாமல் தவிக்கின்றனர் பகுதி மக்கள். இது குறித்து பேசிய கிராம மக்கள் "வீட்டில் எங்கு திரும்பினாலும் ஈக்கள் மொய்க்கின்றன. வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் தொடங்கி குழந்தைகளுக்கு சாப்பிட வைத்திருக்கும் தின்பண்டங்கள் வரை அனைத்திலும் ஈக்கள் இருப்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம். சுவற்றிலும் பல்லிகளைப் போல ஈக்கள் இருக்கின்றன" என்கின்றனர்.
என்ன காரணம்?
திம்ம நாயக்கன் பாளையம் கிராமத்தைச் சுற்றி அதிக அளவில் கோழிப் பண்ணைகள் இருப்பதாகவும் அங்கு இறந்து போன கோழிகளை இப்பகுதியில் வீசி செல்வதே இந்த ஈக்கள் அதிகரிப்பதற்கு காரணம் எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர். சமீபத்தில் இந்தப் பகுதியில் ஏழு தெரு நாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்திருக்கின்றன. இவற்றிற்கும் கோழி கழிவுகள் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலை குறித்து பேசிய ஒருவர் "டீயை குடித்து முடிப்பதற்குள் அதில் 10 ஈக்கள் விழுந்து விடுகின்றன. ஈக்கள் உணவுப்பொருட்களில் ஊர்ந்து செல்வதால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட சுகாதார சிக்கல்கள் மக்களுக்கு ஏற்படுகின்றன. குறிப்பாக முதியவர்கள் மற்றும் பெண்கள் இந்த ஈ தொல்லையால் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்" என்றார்.
புகார்
அதிகரித்து வரும் ஈக்களின் தொல்லையால் பாதிக்கப்பட்ட திம்மநாயக்கன் பாளையம் கிராம மக்கள் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்கும் புகார் அளித்திருக்கின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8