வடகொரிய அதிபர் கிம்மின் மகளா இது.? முதல்முறை பொதுவெளியில் தோன்றினாரா?..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Nov 22, 2022 09:22 PM

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது மகளை முதன்முறையாக வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியானது உலக அளவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. மேலும், அவர் கிம்-ன் இரண்டாவது மகள் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Is this North Korean leader Kim Jong UN daughter

Also Read | பிரதமர் மோடியிடம் முதன்முதலில் ஜடேஜாவை அறிமுகம் செய்துவைத்த தோனி.. உடனே பிரதமர் சொன்ன விஷயம்.. மனம் திறந்த ஜடேஜா..!

உலக அளவில் வடகொரியா எப்போதுமே தனித்துவம் வாய்ந்த தேசமாக கருதப்படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் இந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன். பொதுவாகவே, வடகொரியாவில் நடக்கும் எந்த அரசியல் செயல்பாடுகளும் வெளியுலகிற்கு தெரிவதில்லை. அதேபோல, வட கொரிய அதிபர் குடும்பம் பற்றியோ அவரது வாரிசுகள் பற்றியோ கூட தகவல்கள் வெளியே வருவதில்லை.

Is this North Korean leader Kim Jong UN daughter

இந்நிலையில், முதன்முறையாக வட கொரிய அதிபர் கிம் தனது மகளை வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்து இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்திருப்பது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வட கொரியா ஹ்வாஸாங் 17 என்ற கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. அப்போது, ஏவுகணை தளத்தை தனது மகளுடன் கிம் பார்வையிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Is this North Korean leader Kim Jong UN daughter

இந்த புகைப்படங்களை வடகொரிய அரசு ஊடகமான KCNA வெளியிட்டிருக்கிறது. இதுவரையில் பொதுவெளியில் தனது மகளை அறிமுகப்படுத்தியிராத கிம், தற்போது முதன்முறையாக ஏவுகணையை பார்வையிட மகளுடன் சென்றது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, அரசியல் தளத்தில் தனது மகளை ஈடுபடுத்த கிம் முடிவெடுத்திருக்கலாம் எனவும், அதற்கான பயிற்சியாக இப்படியான நடவடிக்கையில் அவர் இறங்கியிருக்கலாம் எனவும் தென்கொரிய அதிகாரிகள் சிலர் தெரிவித்திருக்கின்றனர்.

Is this North Korean leader Kim Jong UN daughter

அதேபோல, கிம்மின் சகோதரியை போல அரசியல் விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்தும் தலைவராகவும் கிம்மின் மகள் எதிர்காலத்தில் இருக்கலாம் எனவும் அதிகாரிகள் ஆரூடம் கூறியிருக்கின்றனர். இதுவரையில் தன்னுடைய அரசியல் வாரிசு யார்? என கிம் வெளியே அறிவித்ததில்லை. ஒருவேளை தனது சகோதரி அல்லது நம்பிக்கைக்குரிய தளபதிகள் யாரையேனும் அவர் தலைவராக்கலாம் என சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிம் தன்னுடைய மகளுடன் ஏவுகணையை பார்வையிட்டதாக தகவல்கள் வெளியாகி இருப்பது உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது.

Also Read | "இந்த முடிவை ஏற்கிறேன்.. ஆனால்".. பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் ஆன காயத்ரி ரகுராம் பரபரப்பு ட்வீட்..!

Tags : #NORTH KOREAN #KIM JONG UN #NORTH KOREAN LEADER KIM JONG UN #KIM JONG UN DAUGHTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Is this North Korean leader Kim Jong UN daughter | World News.