எங்க 'தளபதிய' கொன்னுட்டீங்க அதான்... 'பழிக்குப்பழி' வாங்கிய ஈரான்... முற்றிய பகையால் பதட்டம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த ஜனவரி மாதம் ஈரான் ராணுவத்தளபதியை அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி கொன்றது.

ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் கொரோனாவுக்கு நடுவிலும் கொஞ்சம் கூட குறையவில்லை. கடந்த ஜனவரி மாதம் ஈரான் தளபதி காசிம் சுலைமானியை வான்வழித்தாக்குதல் நடத்தி அமெரிக்கா கொன்றது. உலகம் முழுவதும் பதட்டத்தை உருவாக்கிய இந்த சம்பவத்துக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்தது.
அதோடு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட 30 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து கைது வாரண்ட் பிறப்பித்தது. இதற்கிடையில் காசிம் சுலைமானி குறித்து அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்ததாக மவ்சாவி மஜித் என்பவரை கடந்த மாத இறுதியில் ஈரான் போலீசார் கைது செய்தனர். ஈரானின் ராணுவ ரகசியங்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்புகளுக்கு வழங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில் அவருக்கு ஈரான் கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த நிலையில் நேற்று அவருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது. காசிம் சுலைமானி கொலையில் முதல்முறையாக ஒருவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
