சில 'தியாகங்கள' பண்ணித்தான் ஆகணும்... முதல்முறையாக 'ஆயிரக்கணக்கான' ஊழியர்களை... வீட்டுக்கு அனுப்பும் 'பிரபல' நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > வணிகம்முதல்முறையாக ஆயிரக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் முடிவை எடுத்துள்ளது.

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் விமான நிறுவனங்கள் பெருத்த அடிவாங்கி இருக்கின்றன. ஊரடங்கு காரணமாக விமானங்களை இயக்க முடியாததால் ஊழியர்களுக்கு சம்பளம் அளிப்பது நிறுவனங்களுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது. சில நாட்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் ஊழியர்களை சம்பளம் இல்லாத விடுமுறையில் அனுப்பி வைக்கப்போவதாக அறிவித்தது.
இந்த நிலையில் பிரபல நிறுவனமான இண்டிகோ தன்னுடைய ஊழியர்களில் 10% பேரை வேலையில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ரொனோஜாய் தத்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தற்போதைய சூழலில் பொருளாதார நெருக்கடிக்கு இடையே நிறுவனத்தை நடத்துவது சாத்தியமற்றது.
தொழிலை பாதுகாப்பதற்காக சில தியாகங்களை செய்தால் மட்டுமே நிறுவனம் இயங்க முடியும். எல்லாவிதமான சாத்தியக்கூறுகளையும் முழுமையாகவும், கவனமாகவும் ஆராய்ந்த பிறகு நாங்கள் 10% ஊழியர்களை வெளியேற்றுவது என்ற தெளிவான முடிவுக்கு வந்திருக்கிறோம். இண்டிகோ நிறுவனத்தின் வரலாற்றில் முதல்முறையாக இத்தகைய வருத்தமான முடிவை எடுத்திருக்கிறோம்,'' என தெரிவித்து இருக்கிறார்.
இண்டிகோ நிறுவனத்தில் தற்போது 24000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் இருந்து சுமார் 2400 ஊழியர்களை நிறுவனம் வெளியேற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
