கொரோனா தடுப்பு பணிக்காக... 'சென்னை'யில் இதுவரை செலவு செய்யப்பட்ட தொகை... எத்தனை 'கோடி'கள் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவை கட்டுப்படுத்த சென்னையில் இதுவரை ரூ.400 கோடி வரை செலவாகி உள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியின் அனைத்து செயல்பாடுகளையும் ஒளிவு, மறைவு இன்றி மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறோம். தற்போது சென்னையில் நாள் ஒன்றுக்கு 13 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. சென்னையில் இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர் களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் முறை யில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் ஒரு மாதத்துக்கு முன்னர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 விகிதமாக இருந்தது. தற்போது பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்தன் மூலம் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 முதல் 12 விகிதமாக மாறியுள்ளது.
அதாவது 4 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தும் போது 1,500 எண்ணிக்கையில் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. தற்போது 13 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தும் போது 1,200 முதல் 1,300 என்ற எண்ணிக்கையில் தான் தொற்று உறுதி செய்யப்படுகிறது.
சென்னையில் இதுவரை 18 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. 11 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனர். இதன் மூலம் 60 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் 80 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தினமும் 40 ஆயிரம் நபர்கள் சென்னையில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
கொரோனாவுக்காக சென்னை மாநகராட்சியில் இதுவரை தோராயமாக ரூ.400 கோடி வரை செலவாகி உள்ளது. சென்னையில் தற்போது மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கையால், கொரோனா தொற்று இரட்டிப்பாக கிட்டத்தட்ட 47 நாட்கள் ஆகிறது. உதாரணமாக 50 என்ற எண்ணிக்கை 100 ஆவதற்கு 47 நாட்கள் எடுத்து கொள்கிறது.
ஏற்கனவே சென்னையில் ஊரடங்கு தளர்வுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு தளர்வை மேலும் பாதுகாப்பான முறையில் கடைப்பிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகக்கவசம், சமூக இடைவெளி மட்டுமே கொரோனாவுக்கான தடுப்பு மருந்து. இதை 4 மாதங்களுக்கு தொடர்ந்து பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மற்ற செய்திகள்
