வெளிய இருந்து பார்க்க வெறும் சூயிங் கம், சான்ட்விச் மாதிரி தான் இருக்கும்...! ஆனா 'அதுக்குள்ளே' இருந்தது 'உலக' அரசியலையே புரட்டி போட்ருக்கும்...! - 'ஹாலிவுட்டை' மிஞ்சும் பயங்கரம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்சாண்ட்விச் மற்றும் சூயிங் கம் ஆகியவற்றில் ஒரு முக்கிய ரகசியத்தை மறைத்து வைத்து அதை விற்பனை செய்ய முயன்றதாக அமெரிக்க கடற்படை அணுசக்திப் பொறியாளர் மற்றும் அவரது மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து ஜோனாதன் டேபே மற்றும் அவரது மனைவி டயானா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் வடிவமைப்பு குறித்த முக்கிய ரகசியத்தை சாண்ட்விச்சில் மறைந்து வைத்து ஒருவரிடம் விற்பதற்கு முயன்றுள்ளனர்.
அந்த நபர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என தம்பதியிடம் அறிமுகம் ஆகியுள்ளார். ஆனால் உண்மையில் அவர் FBI. புலனாய்வு அமைப்பின் ரகசிய ஏஜெண்ட் ஆவார்.
அவர்கள் இருவர் மீதும் இப்போது அணுசக்தி சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜோனாத்தன் டேபே அமெரிக்க கடற்படையில் பணியாற்றி வந்துள்ளார்.
சென்ற வருடம் வெளிநாட்டிற்கு அனுப்ப தடை செய்யப்பட்ட தரவுகள் மற்றும் செய்தி அடங்கிய தொகுப்பை சட்ட விரோதமாக அனுப்பியுள்ளதாக மேற்கு வர்ஜீனிய நீதித்துறை தெரிவித்துள்ளது.
பின்னர், அடையாளம் தெரியாத ஒருவருடன் மின்னஞ்சல் வழியாக தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாக தெரிகிறது. அந்த நபர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என நினைத்துள்ளார்.
ஆனால், அவர் FBI அமைப்பில் பணிபுரியும் ஏஜென்ட் என தகவல் வெளியாகியுள்ளது.
பல மாத பேரத்துக்குப் பிறகு, ஜோனாதன் தம்பதி ரகசியத் தகவலை சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான கிரிப்டோ கரன்சிக்கு விற்க ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.
ரகசியத் தகவலை எடுத்துக் கொண்டு ஜோனாதனும் டயானாவும் மேற்கு வர்ஜீனியாவுக்குச் போயுள்ளனர்.
ஒரு நிலக்கடலை வெண்ணெய் சாண்ட்விச்சுக்குள் ரகசியத் தகவல் அடங்கிய எஸ்.டி. கார்டை ஜோனாதன் ஒரு இடத்தில் மறைத்து வைத்துள்ளார். அப்போது டயானா மற்றொரு இடத்தில் இருந்து அதைக் கண்காணித்துக் கொண்டிருந்துள்ளார்.
அந்த நபர் கார்டை வாங்கிச் கொண்டு சென்ற பிறகு ஜோனாதன் தம்பதியின் கணக்குக்கு பணம் வந்தது. அதன் பிறகு எஸ்.டி. கார்டை திறந்து தகவலைப் படிப்பதற்கான மறைகுறியை ஜோனாதன் தம்பதியினர் வழங்கியுள்ளனர்.
அந்த ரகசியத்தில் "நீர்மூழ்கி கப்பலின் அணு உலை தொடர்பானது" என்று எழுதப்பட்டிருந்தது.
மேலும், 2-வது தடவை "டெட் ட்ராப்" எனப்படும் உளவாளிகள் பயன்படுத்தும் முறையில் ரகசியத் தகவலை விற்க முயன்றுள்ளனர்.
இப்போது சாண்ட்விச்சுக்குப் பதிலாக சூயிங் கம் பாக்கெட்டுக்கு உள்ளே ரகசியத் தகவலை தம்பதி மறைத்து வைத்தனர். அதில் இன்னும் ஏராளம் ரகசிய தகவல்கள் இருந்திருக்கின்றன.
தற்போது அந்த தம்பதியினரை FBI கைது செய்தனர்.