‘எங்க கிட்டயேவா!.. இப்போது பாருங்கள் எங்கள் ராஜதந்திரத்தை’.. 59 ஆப்கள் தடை விவகாரத்துக்கு.. சீனாவின் பதிலடி!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை நிலவி வந்த நிலையில் கடந்த ஜுன் 15ஆம் தேதி ஏற்பட்ட கல்வான் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் டிக்டாக், ஹலோ, யூசி பிரௌசர் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்ததை அடுத்து பொதுமக்கள், தனிநபர் தரவுப் பாதுகாப்பு, தனியுரிமை, நாட்டின் பாதுகாப்பு, இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு கருதி சீனாவின் 59 ஆப்களுக்கு தடை விதித்துள்ளது
இதே சமயம் இந்திய தொலைக்காட்சிகள், ஊடகங்கள், செய்தித்தாள்கள், இணையதளங்களை சீன அரசு முடக்கியுள்ளது. சீனாவில் வெளிநாட்டு இணையதளங்களை பயன்படுத்த ஏற்கனவே தடை இருந்தாலும், விபிஎன் பயன்படுத்தி இத்தனை நாட்களாக பயன்படுத்த முடிந்தது. இந்நிலையில் தற்போது கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் ஐபோன்களில் விபிஎன் பயன்படுத்தியும் இந்திய இணையதளங்களையும், ஊடகங்களையும் பயன்படுத்த முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படி இன்டர்நெட் கட்டுப்பாடுகளை தகர்த்து சேவைகளை பயன்படுத்த வீடுகளில் விபிஎன் பயன்படுத்தப்படும் நிலையில் ஆனால் அவற்றையும் முடக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களை களமிறக்கியுள்ளது டிஜிட்டல் கட்டுப்பாடுகளில் கைதேர்ந்த சீன அரசு. சீனாவுக்கு பிடிக்காத செய்திகள் தொலைக்காட்சியில் வரும் போது அதை வெறும் திரையாக மாற்றி விடக்கூடிய அளவிற்கு சக்திவாய்ந்தது என்று கூறப்படும் வலிமைவாய்ந்த தொழில்நுட்பத்தை சீனா கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது சீன ஆப்களுக்கு இந்தியா தடை விதித்ததை அடுத்து, இந்திய ஊடகங்களை சீனா முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.