'தடுப்பூசி போட்டப்போ...' 'மொதல்ல எந்த பக்க விளைவுகளும் தெரியல...' 'ஆனா...?!!' - போர்ச்சுக்கல் நாட்டில் நடந்த சோகம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்போர்ச்சுகல் நாட்டில் பைசர் நிறுவனம் மூலம் கண்டறியப்பட்ட கொரோனா தடுப்பூசி கடந்த மாதம் (டிசம்பர் மாதம்) முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த தடுப்புசியானது முதலில் முன்கள ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
![Portugal health worker has died within 2 days for vaccine Portugal health worker has died within 2 days for vaccine](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/portugal-health-worker-has-died-within-2-days-for-vaccine.jpg)
இந்நிலையில் போர்ச்சுகல் நாட்டின், போர்ட்டோ நகரில் உள்ள மருத்துவமனையில் சுகாதாரத்துறை ஊழியராக பணியாற்றி வந்த 41 வயதான சோனியா அக்விடோ என்றவருக்கு கடந்த 30-ம் தேதி பைசர் நிறுவன தடுப்பூசி போடப்பட்டது. அதன் பின் சோனியாவுக்கு எந்த விதமாக உடல்நலக்குறைவும், பக்கவிளைவுகளும் ஏற்படாமல் இருந்தது. அதையடுத்து தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் 2 நாட்கள் கழித்து (48 மணி நேரம்) அக்விடோ கடந்த 1-ம் தேதி திடீரென உயிரிழந்தார்.
மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தனது தந்தை வீட்டிற்கு வந்திருந்த அக்விடோ திடீரென உயிரிழந்தது போர்ச்சுகலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கூறிய, அக்டோவின் தந்தை அபிலியோ, 'என் மகளுக்கு எந்தவிட உடல் நலக்கோளாறுகளும் கிடையாது, மது அருந்தும் பழக்கமும் கிடையாது. வழக்கத்திற்கு மாறாக எந்த உணவையும் உட்கொள்ளவில்லை. ஆனால், திடீரென என்ன நடந்தது எனத் தெரியவில்லை. எனக்கு விடை கிடைத்தாக வேண்டும். எனது மகள் உயிரிழப்புக்கான காரணம் எனக்கு தெரியவேண்டும்' என கூறி தன் மனவருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் சுகாதார ஊழியர் சோனியா அக்விடோவின் திடீர் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போர்ச்சுக்கல் சுகாதார ஊழியர்கள் ஆய்வு செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)