‘வலைப் பயிற்சிக்கு பந்துவீச வந்தவங்களயும்’.. ‘ஏ டீமையும் வெச்சு’.. ‘இப்படி பங்கம் பண்ணிட்டு போய்ட்டாங்களே இந்தியர்கள் அய்யகோ’! - புலம்பித் தள்ளிய ஆஸி வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய மண்ணிலேயே வைத்து பார்டர்-கவாஸ்கர் டிராபியை 2வது முறையாக இந்தியா கைப்பற்றியது குறித்து பேசிய முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய அணியை கடுமையாக சாடியுள்ளார்.
அடிலெய்ட் டெஸ்ட்டில் 36க்கு ஆல் அவுட் என்கிற தகவலை அறிந்தவுடனேயே பாண்டிங் உட்பட அனைவருமே இந்திய அணியை ஊற்றி மூடினர். 4-0 என்று ஒருபக்கம் பேசத் தொடங்கினர். இன்னொரு புறம் ஒயிட் வாஷ் என்றே பேசத் தொடங்கிவிட்டனர். ஊஹூம். இது மைண்ட் கேம். இந்தியாவால் முடியாது என்றனர்.
ஆனால் உண்மையில் மைன்ட் கேம் ஆடிப் பழக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணிக்கு தான், இப்போது தங்கள் மைதானத்தின் கேம் மறந்து விட்டது என்பதற்கு சான்றாகியுள்ளது ஆஸ்திரேலியாவின் இந்த அபார தோல்வி. தங்கள் அணியில் இருக்கும் பயிற்சி போதவில்லையே, ‘இன்னும் பயிற்சி வேண்டுமோ?’ என தங்கள் அணியின் கோளாறுகளைப் பற்றிப் பேசாமல் தவிர்த்து வந்தனர். புஜாரா இப்படி அறுவை போடக்கூடாது, ரன்களை வேகமாக எடுக்க வேண்டும் என்றெல்லாம் ஏகத்துக்கும் பேசிய, ஏசிய பாண்டிங் இப்போது புலம்பத் தொடங்கியுள்ளார். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என உலக அளவில் இருக்கும் இந்திய கிரிக்கெட் ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுபற்றி புலம்பியத் தள்ளிய ரிக்கி பாண்டிங், “கேப்டன் விராட் கோலியோ முதல் டெஸ்ட்டுடன் இந்தியா திரும்ப, அஸ்வின், புஜாரா, ஜடேஜா, விஹாரி என வீரர்களும், பவுலர்களும் காயமடைந்து விட, மொத்தமாக இந்திய அணியில் 20 வீரர்கள் களமிறங்கினர். சொல்லப் போனால் களமிறங்கிய வீரர்கள் இந்திய அணிக்குள் இறங்கிய இந்திய அணியின் ஏ டீம். ஆம், இந்திய அணி, இந்திய அணியின் ஏ டீமைத்தான் இந்திய அணிக்குள் லாவகமாக களமிறக்கியது. அதே சமயம் சொந்த மண்ணிலேயே ஆஸியால் இந்திய அணியை வீழ்த்த முடியவில்லை என்பது அதிர்ச்சி தான்.
ஸ்மித், வார்னர் ஆகியோர் இல்லாமலே 2018-19 தொடரில் இந்தியா வென்றது. ஆனால் முழு பலத்துடன் ஆஸ்திரேலியா இந்த முறை களமிறங்கியது. அதனாலேயே இந்த தோல்வி ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. இப்படி ஏ டீமை வைத்தும், வலைப் பயிற்சியில் பந்து வீச அழைத்து வந்தவர்களை வைத்தெல்லாம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானதொரு கடினமான தொடரையே வென்று விட்டார்களே இந்த இந்தியர்கள்!. அத்தனை பலவீனமாகவா இத்தனை ஸ்திறமான ஆஸ்திரேலிய அணி போய் விட்டோம். இந்திய ஏ டீமை விடவும் நாம் மோசமாகிவிட்டோமே?
இப்படி இளம் ரத்தங்களை வைத்து ஆஸி மண்ணிலேயே வைத்து இப்படி இரு தொடரை வெல்லும் அசாத்திய திறமை இந்தியர்களிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவின் கோட்டையான பிரிஸ்பனிலேயே வென்றிருக்கிறார்கள். நாம் இப்படி நடக்க விட்டிருக்கவே கூடாது” என்று பேசினார்.