லைக் போடுபவர்களின் விவரங்களை சேகரித்த விவகாரத்தில் பேஸ்புக் கட்ட வேண்டிய அபராதம் எவ்வளவு தெரியுமா?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Feb 16, 2022 05:32 PM

பேஸ்புக் உலகம் முழுவதிலும் உள்ள மக்களை நம்முடன் இணைக்கும் பாலமாக செயல்படுகிறது. வளர்ந்து வரும் டிஜிட்டல் துறைகள் மூலமாக நம்முடைய நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட நாம் கற்றுக்கொள்ளவேண்டும். ஆனால், நாள்தோறும் பேஸ்புக்கில் மூழ்கி முத்தெடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Facebook-Meta To Pay $90 Million For Spying On Users

கிட்னியை தானமாக கொடுத்த நல்ல மனசுக்காரருக்கு இப்படி ஒரு கஷ்டம் வரணுமா..? மருத்துவனை சொன்ன அதிர்ச்சி தகவல்..!

இடையிடையே ப்ரியா ஸ்வீட்டி போன்ற பேக் ஐடிகளால் கடுப்பானாலும் மற்றபடி பேஸ்புக் மிகப்பெரிய பொழுது போக்கும் இடமாக பலருக்கும் இருந்துவருகிறது. இப்படியான சூழ்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா வாடிக்கையாளர்களின் தகவல்களை சட்ட விரோதமாக பயன்படுத்திய வழக்கில் 90 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக செலுத்த ஓகே சொல்லி இருப்பது அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறது.

லைக்

கடந்த ஏப்ரல் 22, 2010 முதல் செப்டம்பர் 26, 2011 ஆம் தேதி வரையில் பேஸ்புக் உபயோகித்த அமெரிக்க மக்களின் தகவல்களை அந்நிறுவனம் கண்காணித்ததாக கலிபோர்னியாவின் சான் ஜோஸ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதில், லைக் பட்டன்களை உபயோகித்த நபர்களின் தனிப்பட்ட விவரங்களை பேஸ்புக் சேகரித்ததாகவும் பொது மக்களின் பிரவுசர் ஹிஸ்டரியை திருடி தங்களது விளம்பர நிறுவனங்களுக்கு விற்றதாகவும் பேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

Facebook-Meta To Pay $90 Million For Spying On Users

மீண்டும் விசாரணை

இந்த வழக்கை 2017 ஆம் ஆண்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருப்பினும், அந்த நிறுவனத்தின் விளம்பர நிறுவனங்கள் சந்தேகத்திற்கு இடமாக வருமானம் ஈட்டியதைத் தொடர்ந்து மீண்டும் பேஸ்புக் நிறுவனம் மீது புகார் எழுந்தது.

"இந்த வழக்கை பொறுத்தவரையில் செட்டில்மென்ட் செய்வதையே எங்களது சமூகம் மற்றும் எங்களது பங்குதாரர்கள் விரும்புகின்றனர். இதன்மூலமாக இந்த விஷயத்தை நாங்கள் கடந்துசெல்ல முடியும்" என மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் Drew Pusateri தெரிவித்திருக்கிறார்.

டீல்

முதற்கட்ட செட்டில்மென்டிற்கு மெட்டா நிறுவனம் சம்மதம் தெரிவித்திருக்கும் நிலையில் விசாரணைக்குழு குறிப்பிட்டுள்ள 90 மில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நிறுவனம் வழங்க வேண்டியிருக்கும். இந்த செட்டில்மென்ட் குறித்த ஆவணங்கள் நீதிபதியின் கையெழுத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மக்களின் தகவல்களை சேகரித்த வழக்கில் எப்படியான வாதங்கள் முன்வக்கப்படும் என உலகமே உற்று நோக்கி வருகிறது.

தலைக்கு ஏறிய போதை.. தகாத உறவால் வந்த வினை.. இளைஞர் கைது..!

Tags : #FACEBOOK-META #SPYING ON USERS #PRIVACY #பேஸ்புக் #லைக் பட்டன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Facebook-Meta To Pay $90 Million For Spying On Users | World News.