'பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா...' உறுதி செய்த மாநிலம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் 10 வகுப்பு தேர்வெழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும் கொரோனோவின் பரவும் வீதம் கட்டுக்குள் வரவில்லை என்றே கூறலாம்.
இதன் காரணமாக பல்வேறு மாநில அரசுகள் தங்கள் மாநில 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்துள்ளது. ஆனால் கர்நாடக மாநில அரசு பல்வேறு எதிர்ப்புகளை மீறி கடந்த ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதிவரை பத்தாம் வகுப்புத் தேர்வு நடைபெற்றது.
இதுதொடர்பாக கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கர்நாடகத்தில் சுமார் 7.60 லட்சம் மாணவர்கள் 10-ம் வகுப்புத் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், அதில், 14,745 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேலும் 3,911 பேர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் தேர்வு எழுதவரவில்லை. 863 பேர் உடல்நிலை சரியில்லாமல் தேர்வு எழுத வரவில்லை' என அறிவித்துள்ளனர்.
தேர்வு ஆரம்பித்த முதல் நாளில் மாணவர்களின் எண்ணிக்கை 98.3 சதவீத வருகையைப் பதிவாகவும், சனிக்கிழமையன்று இது 97.9 சதவீதம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று, பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 10 ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிதுள்ளது கர்நாடக மாநில அரசு.