'உலகமே தடுப்பு மருந்துக்காக காத்திருக்க'... 'நிலைகுலைய வைத்துள்ள பாதிப்பிலும்'... 'வியப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க விஞ்ஞானியின் கருத்து!'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க தொற்று நோயியல் விஞ்ஞானியான அந்தோணி பாஸி கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக்கொள்ளுமாறு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக பாதிப்பு எண்ணிக்கை, உயிரிழப்பு என அமெரிக்காவை இந்த வைரஸ் பாதிப்பு நிலைகுலைய வைத்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி தேவைப்படும் நாடுகளில் முதன்மையானதாக உள்ள அமெரிக்கா, கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகளுக்கு அதிக பணம் ஒதுக்கி பணியாற்றி வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி தயாரானதும் அமெரிக்க மக்களுக்கு இலவசமாகப் வழங்கப்படும் எனவும் சில நாள்களுக்கு முன் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்க தொற்று நோயியல் விஞ்ஞானியும், கொரோனா தடுப்பு பணிக்குழுவின் உறுப்பினருமான அந்தோணி பாஸி, "அமெரிக்க மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அவசியம் இல்லை. மேலும், தடுப்பூசி தயாரிக்கப்பட்ட பின்னும் அதைப் போட்டுக்கொள்ளுமாறு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. இதுவரை எந்தவொரு தடுப்பூசியும் கட்டாயப்படுத்தப்படவில்லை. இருப்பினும் உள்ளூர் நிர்வாகம் விரும்பினால் குழந்தைகள், சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பு மருந்தை வழங்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
