அனைவருக்கும் கொரோனா 'தடுப்பூசி' இலவசம்... அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தொற்று நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க உலகின் பல்வேறு நாடுகளும் முயற்சி செய்து வருகின்றன. தடுப்பூசி கண்டறிந்து விட்டதாக ரஷ்யா அறிவித்து இருக்கிறது எனினும் மனித பரிசோதனைகள் முழுமையாக முடியாததால் உலகின் பல்வேறு நாடுகளும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட பிறகு அமெரிக்க மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுகாதாரத் துறை மூத்த அதிகாரி பவுல் மாங்கோ, “கொரோனா தடுப்பூசி தீவிரமாக பரிசோதிக்கப்படும். தடுப்பூசிக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும்.
மருத்துவ ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளும். மக்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுகளை ஏற்க பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. 2021 ஜனவரி மாதத்திற்குள் பல கோடி தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டிருக்கிறோம்,'' என தெரிவித்து இருக்கிறார்.