'தடுப்பு மருந்து வேணும்னு ஆசைப்பட்டா மட்டும் போதுமா!? 'இது' இல்லாம இனி எங்களால அடுத்த அடி எடுத்து வைக்க முடியாது!'.. சீரம் நிறுவனம் பரபரப்பு கருத்து!
முகப்பு > செய்திகள் > இந்தியாபூனேவை மையமாகக் கொண்ட சீரம் இன்ஸ்டிடியூட் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்க சுமார் 7,500 கோடி ரூபாய் நிதி திரட்ட இருக்கிறது.

உலக அளவில் அதிகமான வாக்சின்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (SII) திகழ்கிறது.
இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கும் போட்டியில், சீரம் நிறுவனமும் இருக்கிறது. முன்னதாக, பில் கேட்ஸ்-இன் தொண்டு நிறுவனம் மற்றும் GAVI வாக்சின்ஸ், கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கும் பணிகளுக்காக, சீரம் நிறுவனத்தில் 150 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்திருந்தன. அதன் அடிப்படையில், 2021ம் ஆண்டிற்குள் 100 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகளை உருவாக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ப்ளாக்ஸ்டோன் மற்றும் KKR போன்ற பெரு நிறுவனங்களிடமிருந்து சுமார் 7,500 கோடி ரூபாய் (1 பில்லியன் அமெரிக்க டாலர்) நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
கடந்த மாதம், SII-இன் தலைமை செயல் அதிகாரி பேசுகையில், தங்கள் நிறுவனம் சொந்த செலவில் 200 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை ஆக்ஸ்ஃபோர் தயாரிக்கும் தடுப்பு மருந்தில் முதலீடு செய்திருப்பதாக தெரிவித்தார். எனினும், கொரோனா தடுப்பு மருந்தின் ஆராய்ச்சி மற்றும் ஆக்கப் பணிகளுக்கு பல்லாயிரம் கோடி நிதி தேவைப்படுவதால், உலகம் முழுவதும் நிதி திரட்ட மருந்து நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.

மற்ற செய்திகள்
