'அணிலுக்கு வந்துள்ள புதிய தொற்று நோய்...' 'இது செம ஸ்பீடா பரவும்...' 'வந்துச்சுன்னா ஒரே வாரத்துல ஆள் காலி...' - மக்கள் கடும் அச்சம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் கொலராடோவில் இருக்கும் அணிலுக்கு புபோனிக் பிளேக் தொற்று உறுதியான செய்தி மனிதர்களுக்கும் பரவும் என்ற அச்சத்தை அமெரிக்காவில் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கருப்பு மரணம் என அழைக்கப்படும் பிளாக் தொற்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆயிரக்கணக்கான மக்களை காவு வாங்கியது. தற்போது இந்த பாக்டிரியாவானது கொலராடோ மாநிலத்தில் உள்ள அணிலுக்கு பரவியுள்ளது. அதன் மூலம் மனிதர்களுக்கு மனிதர்களுக்கு பரவக்கூடும் என்ற அச்சத்தைத் தூண்டியது.
புபோனிக் பிளேக் ஒரு பாக்டீரியா நோயாகும், இது காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் 200 மில்லியன் மக்களைக் கொன்ற கறுப்பு மரணத்திற்கு இது காரணமாக இருந்தது, ஐரோப்பாவின் மக்கள் தொகையில் 60 சதவீதத்தை அழித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. திடீரென அதிக காய்ச்சல், சளி, தலைவலி, குமட்டல் மற்றும் தீவிர வலி மற்றும் நிணநீர் முனையின் வீக்கம் ஆகியவை வெளிப்பட்ட இரண்டு முதல் ஏழு நாட்களுக்குள் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது டென்வரின் தென்மேற்கே உள்ள மோரிசன் நகரில் பிளேக் நோய் உறுதிசெய்யப்பட்ட அணிலை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து கூறிய பொது சுகாதார அதிகாரிகள், ' பிளேக் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் முன்கூட்டியே எடுக்காவிட்டால் இது மனிதர்களுக்கு பரவி மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர். மேலும் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இந்த பாக்டீரியாவனது ஒரு வாரத்திற்குள் மனிதர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும்' எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கொடிய பாக்டிரியாவால் பாதிக்கப்பட்ட விலங்கு மனிதர்களை கடித்தால், அதன் மூலம் புபோனிக் பிளேக் பரவும் எனவும் ஜெபர்சன் கவுண்டி பொது சுகாதாரம் தெரிவித்துள்ளது. நோய் பாதிப்பு ஏற்பட்ட ஒருவர் இரும்பும் பொது சுலபமாக மற்றொருவருக்கு பரவும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மற்ற செய்திகள்
