'நாங்க குழந்தைங்கடா...' நல்லவேளை அதுக்குள்ள 'அவங்க' வந்தாங்க...! பரபரப்பு சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 06, 2020 02:20 PM

தமிழகத்தில் ஒரே நாளில் 5 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 Child marriage stopped in TamilNadu by Child help line

தமிழகத்தில் உள்ள  ஆலம்பச்சேரி கிராமம், சிவகங்கை அருகே உள்ள கீழச்சாலூர், நாமனூர், தமறாக்கி வடக்கு ஆகிய கிராமங்களில் நேற்று நடக்கவிருந்த 5 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. 5 குழந்தைகளில் 3 பேர் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

மானாமதுரை அருகே ஆலம்பச்சேரி கிராமத்தில் 17 வயது சிறுமிக்கு நேற்று திருமணம் பெற்றோர்களால் நடத்தபட இருந்தது.

அதேபோல, சிவகங்கை அருகே கீழச்சாலூரில் 17 வயது மதிக்கத்தக்க 2  சிறுமிகளுக்கும், நாமனூரில் பதினைந்து வயது சிறுமிக்கும், தமறாக்கி வடக்கு கிராமத்தில் 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இதனை அறிந்த பொது மக்களில் சிலர்,  மாவட்ட சைல்டுலைன் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதை அறிந்த உடன் சைல்ட் லைன் இயக்குனரான ஜீவானந்தம் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தபாபு, துணை மையத் தலைவர் ராஜேஷ், ஆலோசகர்கள் ஜூலியட் வனிதா, கார்த்திகேயன், ராமர், சுகன்யா, சாந்தி ஆகியோர் போலீசிலும் தகவல் சொல்லி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

போலீஸாரின் உதவியோடு சென்று 5 குழந்தைத் திருமணங்களையும் தடுத்து நிறுத்தினர். இது குறித்து சிறுமிகளின் பெற்றோர்களிடம் போலீசாரும், சைல்ட் லைன் குழுவும்  விசாரணை நடந்து வருகிறது. சிறுமிகள் கல்வியைதொடர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்

Tags : #CHILDMARRIAGE