கன்ட்ரோல் மிஸ் ஆயிடுச்சு...! 'கண்டிப்பா அடுத்த சில நாட்களில்...' - விண்வெளிக்கு சென்ற லாங் மார்ச் 5பி குறித்து வெளிவந்துள்ள அதிர வைக்கும் தகவல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | May 04, 2021 11:40 AM

விண்ணில் சீனா செலுத்திய லாங் மார்ச் 5பி ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து பூமியை சுற்றிக்கொண்டு இருப்பதாகவும் எப்போது வேண்டுமானாலும் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்து கீழே விழ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

China\'s Long March 5B rocket lost control orbiting the Earth

அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் சீனா இடம் பெறவில்லை.

ஆகவே, தங்களுக்கான விணிவெளி நிலையத்தை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.  பூமிக்கு மேலே 370 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த நிலையம் அமைக்கப்படவுள்ளது. தாங்கள் கட்டும் புதிய விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியை லாங் மார்ச் 5பி என்ற ராக்கெட் மூலம் கடந்த ஏப்ரல்  மாத இறுதியில் சீனா விண்ணில் ஏவியது. இந்த தொகுதியின் எடை 21 டன் என கூறப்படுகிறது.

இந்த ராக்கெட்டின் பாகம் தற்போது கட்டுப்பாட்டை இழந்து பூமியை சுற்றி வருகிறது. அடுத்த சில நாட்களில் எப்போது வேண்டுமானாலும் இந்த ராக்கெட் பாகம் பூமியில் விழக்கூடும் என ’ஸ்பேஸ் நியூஸ்’ செய்தி நிறுவனம் அதிர்ச்சியளிக்கும் செய்தியை  வெளியிட்டுள்ளது.

100 அடி உயரமும் 16 அடி அகலமும் உடைந்த இந்த ராக்கெட்டின் பாகம் பூமிக்குள் நுழையும்போது, வளிமண்டல உராய்வு காரணமாக எரிந்து சிதைந்து விடும். எனினும் அதிகளவிலான சிதைவுகள் பூமியில் விழக்கூடிய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், எங்கு விழும், எப்போது விழும் என்பதை கணிக்கக் கூடிய சூழல் தற்போது இல்லை என்றும் அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது .

சீனாவின் ராக்கெட்  பூமியில் விழுவது ஏற்கனவே பலமுறை நடந்த ஒன்று தான். கடந்த ஆண்டு மே மாதம், சீனாவின் லாங் மார்ச் 5-பி ராக்கெட்  பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து வடமேற்கு ஆப்பிரிக்காவில் மவுரித்தேனியா கடல் பகுதியில் விழுந்தது குறிப்படத்தக்கது.

Tags : #CHINA #ROCKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. China's Long March 5B rocket lost control orbiting the Earth | World News.