'ஆமாம்...' 'சீன வீரர்கள்' சிலர் 'உயிரிழந்துள்ளனர்...' 'முதல் முறையாக' ஒப்புக் கொண்ட 'சீனா...' 'ஆனால்' எவ்வளவு பேர்?...'
முகப்பு > செய்திகள் > உலகம்இந்திய வீரர்களுடன் கடந்த 15ம் தேதி ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் உயிரிழந்ததை முதன் முறையாக அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது.
கிழக்கு லடாக் எல்லை பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவது தவறான தகவல் சீனா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லிஜியன் சோ கூறி இருந்தார்.
உண்மையில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவலையும் அவர் சரியாக வெளியிடவில்லை. இந்தநிலையில் தற்போது உயிரிழப்பு குறித்து சீனா தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் அதிக எண்ணிக்கையில் இல்லை என்றும் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என்பதற்காகத்தான் எண்ணிக்கையை வெளிப்படுத்தவில்லை என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கர்னல் ஒருவர் உட்பட இரண்டு அதிகாரிகள் உயிரிழந்ததாக, இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின் போது ஒப்புக் கொண்ட சீனா, தற்போது வீரர்கள் சிலர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.