'கார்கில்' போரில் 'பாகிஸ்தானை' கதற விட்டவர்கள் 'இவர்கள் தான்...' 'போராடுவதற்கென்றே பிறந்தவர்கள்...' 'இந்திய ராணுவம்' பாராட்டு...
முகப்பு > செய்திகள் > இந்தியாகல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில், சீன வீரர்களுடன் போராடிய பீஹார் ரெஜிமென்டிற்கு, இந்திய ராணுவம், பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்திய - சீன எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பகுதியில், கடந்த 15ம் தேதி, சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில், நம் ராணுவ வீரர்கள், 20 பேர், வீர மரணம் அடைந்தனர்.
இவர்களில் பெரும்பாலானோர், பீஹார் ரெஜிமென்டை சேர்ந்தவர்கள். இந்நிலையில், இந்திய ராணுவம், அந்த படைக்கு பாராட்டு தெரிவித்து, 'டுவிட்டரில், 'வீடியோ' ஒன்றை பதிவிட்டுள்ளது.
அதில், ராணுவ மேஜர் அகில் பிரதாப், பீஹார் ரெஜிமென்ட்வீரர்களை பாராட்டியுள்ளார். 'பீஹார் ரெஜிமென்ட் வீரர்கள், கார்கில் போரில், பாகிஸ்தான் ராணுவத்தினரை எதிர்த்து, வெற்றி கண்டவர்கள். இந்த வெற்றி, 21 ஆண்டுகளுக்கு முன், இதே மாதத்தில் நடந்தது. பீஹார் படை பிரிவினர், போராடுவதற்கென்றே பிறந்தவர்கள்' என, கூறியுள்ளார்.
பிரிட்டிஷாரால் 1941ல் பீஹார் ரெஜிமென்ட் உருவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின், நம் ராணுவத்தின் யுத்த களங்களில், இப்படை பிரிவு முக்கிய பங்காற்றி வருகிறது.

மற்ற செய்திகள்
