"ஏர்போர்ட்'ல வெச்சு கைதானாரா..? "எங்க தான் இருக்காரு சீன அதிபர்?".. உலகமே கூர்ந்து கவனித்த நிகழ்வு.. வெளிச்சத்துக்கு வந்த உண்மை??
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த சில தினங்களாகவே சீன அதிபர் ஜி ஜின்பிங் குறித்து வெளிவரும் தகவலும் அதன் பின்னால் உள்ள காரணமும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
Also Read | அதிவேக பைக் பயணம்.. சரணடைந்த TTF வாசன்.. அடுத்தடுத்து நடந்தது என்ன??
சீன அதிபரான ஜி ஜின்பிங், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சீன அதிபராக இருந்து வருகிறார்.
இதனிடையே, கடந்த சில நாட்களாக ஜின்பின் வீட்டுச் சிறையில் இருப்பதாகவும், சீனாவில் ராணுவ புரட்சி உருவாகி உள்ளதால், நாட்டின் முழு கட்டுப்பாடும் சீன ராணுவத் தளபதியிடம் சென்றதாகவும் இணையத்தில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி வந்தன. இதனால், உலக நாடுகள் மத்தியில் சீன அதிபர் தொடர்பான செய்திகள், பெரிய அளவில் பேசு பொருளாக மாறி இருந்தது.
உஸ்பெகிஸ்தான் தலைநகர், சாமர்கண்ட்டில் நடந்த ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி சீனாவுக்கு திரும்பி இருந்தார். அப்படி நாடு திரும்பும் போது, விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தினர் மூலம் கைது செய்யப்பட்ட ஜின்பிங், அப்போதில் இருந்தே வீட்டுச் சிறையில் இருப்பதாகவும், சீனாவின் அடுத்த அதிபராக ராணுவ தளபதி லீ கியாமிங் பொறுப்பேற்றுக் கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வலம் வந்தது.
அமெரிக்காவில் வசிக்கும் சீன பெண் ஒருவர், இது பற்றி ட்விட்டரில் பதிவிடவே அத்துடன் ராணுவ வாகனங்கள் அணிவகுத்து செல்லும் வீடியோ காட்சியையும் பகிர்ந்திருந்தார். அதே போல, விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக சில புகைப்படங்கள் கூட போலியாக வலம் வந்திருந்தது. இதனிடையே, ராணுவ அணிவகுப்பு வீடியோவும் போலி என்பது.உறுதியானது. ஆனாலும், இந்த வதந்திகள் குறித்து சீன அரசும், அரசு ஊடகமும் எந்தவொரு விளக்கத்தையும் அளிக்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில், தன்னை பற்றிய வதந்தி அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பொது நிகழ்ச்சி ஒன்றில் தற்போது சீன அதிபர் ஜின்பிங் தோன்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெய்ஜிங்கில் நடந்து வரும் கண்காட்சி ஒன்றில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு பிறகு முதல் முறையாக பொது வெளியில் ஜின்பிங் தோன்றி உள்ளதால், சீனாவில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதாக இணையத்தில் வலம் வந்த தகவல்கள் வதந்தி தான் என்பதும் ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.
பொதுவாக, சீனாவில் பொது நிகழ்ச்சியில் அதிபர் கலந்து கொண்டாலே, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னை இரண்டு வாரங்கள் வரை தனிமைப்படுத்தி கொள்வார் என்றும், உஸ்பெகிஸ்தான் வரை சென்று வந்ததால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு வேளையில் தான், அவர் வீட்டுக் காவலில் இருப்பதாகவும், சீனாவில் ராணுவ ஆட்சி அமைக்க உள்ளதாகவும் வதந்திகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.