"ஒரு காலத்துல ட்யூஷன் டீச்சரா இருந்தவங்க".. ஒரே நாளில் 14 லட்சம் சம்பாத்தியம்.. வாழ்க்கையே திருப்பி போட்ட அந்த ஒரு நாள்!!
முகப்பு > செய்திகள் > வணிகம்ஒரு காலத்தில் ட்யூஷன் டீச்சராக இருந்த பெண் ஒருவர், தற்போது கோடீஸ்வரியாக மாறியுள்ள நிலையில், இதற்கான காரணம் பலரையும் மிரள வைத்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் என்னும் பகுதியை சேர்ந்தவர் கவிதா. சிறு வயது முதலே படிப்பில் நம்பர் ஒன்னாக திகழ்ந்த கவிதா, கல்லூரி படிப்பின் போதே ட்யூஷன் நடத்தி வருமானம் பெற தொடங்கி உள்ளார்.
வீட்டின் வறுமை நிலையை தாண்டி, கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு கிடைக்கும் பணத்தை சேமிப்பதையும் கவிதா வழக்கமாக கொண்டு வந்துள்ளார்.
தனது கல்லூரி படிப்பை முடித்த பின்னர், ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார் கவிதா. அங்கே தனது பயிற்சி காலத்தில் கவிதா இருந்த போது, உடன் இருந்தவர்கள் பங்குச்சந்தைகளில் மூழ்கி கிடப்பதை அவர் உணர்ந்துள்ளார். மேலும், பங்குச்சந்தை பற்றி முதல் முறையாக கவிதா அப்போது தான் கேள்விப்பட்டுள்ளார். தனக்கென கூடுதல் வருமானம் பெறுவதை ஒரு பழக்கமாக கவிதா கொண்டிருந்ததால், பங்கு வர்த்தகம் பற்றி அறியவும் முனைப்பு காட்டினார்.
தன்னுடன் பணியாற்றும் சக ஊழியர் மூலம் ஸ்டாக் பரிவர்த்தனை பற்றி கவிதா அறிந்து கொண்டுள்ளார். மேலும், வர்த்தக செய்தித் தாள்கள் மற்றும் இதழ்களை படித்தும் தனக்கான புரிதலை அவர் ஏற்படுத்தி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இன்ட்ராடே வர்த்தகம் செய்ய தொடங்கி, நாள் ஒன்றுக்கு 200 முதல் 400 ரூபாய் வரை அவர் லாபம் பார்த்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
தனது போர்ட்போலியோவை உருவாக்க, வங்கியில் இருந்து தனிநபர் கடன் வாங்கி, பெரிய முன்னேற்றம் காணவும் கவிதா ஆரம்பித்துள்ளார். பங்கு சந்தை குறித்து நன்கு தெரிந்து கொண்ட கவிதா பற்றி, அவரது பெற்றோர்கள் தெரிந்து கொண்டதும் ஒரு நொடி பயந்து போயினர். பங்கு சந்தையில் பல லட்சம் கடன் ஆனால் என்னவாகும் என கருதினர். ஆனால், தனது போர்ட்போலியோவை பெற்றோர்களிடம் காண்பித்து அதில் இருக்கும் பணத்தை பற்றி அவருக்கு புரிய வைத்தார் கவிதா.
அதே வேளையில், பல முறை பங்குச் சந்தை வர்த்தகத்தில் இழப்பையும் கவிதா சந்தித்துள்ளார். அதிகபட்சமாக 8 லட்சம் ரூபாய் வரை அவருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல, ஆப்ஷன் டிரேடிங்கில் கவிதாவின் மிகப்பெரிய லாபம் என்பது இன்று வரை ஒரே நாளில் 14 லட்சம் ரூபாய் சம்பாதித்ததாகும்.
ஆஸ்திரேலியாவில் தற்போது ஐடி ஊழியராக பணிபுரிந்து வரும் கவிதா, 11 ஆண்டுகளுக்கு முன் இந்திய பங்குச்சந்தை குறித்து தெரிந்து கொண்டார். அந்த சமயத்தில், சுமார் 30,000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த கவிதாவின் பங்குச்சந்தை போர்ட்போலியோ, இன்று 2 கோடி ரூபாய்க்கு மேல் அதிக மதிப்புமிக்கதாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், புதிதாக முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு சரியான அறிவுரையை வழங்கி வருகிறார் கவிதா.
Also Read | "இந்தா நண்பா சாப்பிடு".. தாயாகவே மாறிய தோழன்.. வீடியோ'வ பாத்து ஆனந்த கண்ணீர் வடிக்கும் நெட்டிசன்கள்!!