ஐயோ, 'அந்த பொருள்' எப்படிங்க அங்க போச்சு...? இதயத்துக்கும் நுரையீரலுக்கும் 'நடுவுல' சிக்கியிருந்த விசித்திரமான பொருள்...! - பின்னணியில் இருந்த 'அதிர' வைக்கும் தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற நபரின் இதயத்தை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்த சம்பவம் ஐரோப்பாவில் நடந்துள்ளது.
ஐரோப்பாவை சேர்ந்த 56 வயதான ஒருவர் கடுமையான நெஞ்சு வலி மற்றும் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு மேற்கொண்ட எக்ஸ்ரே பரிசோதனையைக் கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதுவரை ஒரு சில நபர்கள் தங்களின் சுய உணர்வுக்காகவும், குடிபோதையிலும் பல பொருட்களை விழுங்கி மருத்துவமனைக்கு வருவார்கள். ஆனால், இந்த நபரின் விஷயத்தில் நடந்த கதையே வேறு. இதற்கு முன் செய்த சிகிச்சையே இவரின் இந்த நெஞ்சு வலிக்கு காரணமாகி, உயிரை வாங்கும் அளவிற்கு சென்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சயின்ஸ் ஜெர்னலில் வெளியான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாதாவது, 'நெஞ்சு வலியோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 56 வயதான நபரை பரிசோதித்து பார்த்தபோது அவரின் இதயத்திற்கும் நுரையீரலுக்கும் இடையில் ஒரு விசித்திரமான விஷயம் சிக்கியிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
கூர்மையான கல் போன்று இருந்த பொருள் பலக்கட்ட பரிசோதனைக்கு பிறகே சிமெண்ட் என கண்டறியப்பட்டது. அதோடு, அந்த சிமெண்ட்டால் பாதிக்கப்பட்ட நோயாளியின் இதயத்தில் ஒரு துளை ஏற்பட்டுள்ளது.
போர்ப்ஸின் ஆன்லைன் அறிக்கையில், 'நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்' ஆய்வு அறிக்கையில் இந்த சிமெண்ட் பாதிக்கப்பட்ட நபர் சில வருடங்களுக்கு முன்பு செய்த அறுவை சிகிச்சை மூலமே உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு முன் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் காரணமாக நோயாளின் முதுகெலும்பில்
முறிவு ஏற்பட்டது. இந்த பிரச்சனையை சரி செய்ய, டாக்டர்கள் சில காலத்திற்கு முன்பு கைபோபிளாஸ்டி செய்தார்கள். இந்த சிகிச்சையில், முதுகெலும்பில் ஒரு சிறப்பு வகை சிமெண்ட் வைக்கப்படுகிறது. எலும்பின் நீளம் இயல்பாக இருக்கும் வகையில் சிமெண்ட் பொருத்தப்படுகிறது. இந்த வழக்கில், முதுகெலும்பில் இருந்த சிமெண்ட் துண்டு வெளியே வந்து நரம்புகள் வழியாக இதயத்திற்கு சென்றது. இந்த கூர்மையான துண்டு நரம்புகள் வழியாகச் சென்று அந்த நபரின் இதயச் சுவரில் துளையிட்ட தோடு நுரையீரலையும் துளைத்தது. இதனால் அவருக்கு நெஞ்சு வலியும் மூச்சு திணறலும் ஏற்பட்டது.
இதற்குப் பிறகு, சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உடனடியாக முடிவு செய்யப்பட்டது. அதாவது, மருத்துவர்களின் உடனடி சிகிச்சை காரணமாக, இந்த நடுத்தர வயது மனிதனின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஒரு சிக்கலான அறுவை சிகிச்சைக்கு பிறகு, இதயத்தில் இருந்த சிமெண்ட் கல் அகற்றப்பட்டது.