இப்படியெல்லாம் கூடவா நடக்கும்...? இவரோட இதயத்துல 'லப்டப்' சத்தம் கேட்கல...! 'அதுக்கு பதிலா...' - மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்திய ஆச்சரியம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்65 வயதான அமெரிக்கர் ஒருவருக்கு சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பின் சில நாட்களுக்கு பின் அந்த முதியவரின் ரத்தக் குழாய்கள் இயல்பான அளவில் உள்ளனவா அல்லது சுருங்கி உள்ளனவா என்பதை அறிவதற்காக மருத்துவர்கள் டாப்ளர் ஸ்கேன் பரிசோதனை செய்தனர்.
இந்த டாப்ளர் ஸ்கேன் உடலுக்குள் அசைகிற, நகர்கிற திசுக்களைப் படம் பிடித்துக் காண்பிக்கும் ஒரு பரிசோதனை ஆகும். மேலும் இந்தப் பரிசோதனையில் இதயத்திலிருந்து பெறப்படும் ஒலி அலைகளை எக்கோ கருவியில் உள்ள கணினி இருபரிமாணம் அல்லது முப்பரிமாணப் படங்களாகத் தயாரித்துத் திரையில் காண்பிக்கும்.
முதியவருக்கு டாப்ளர் ஸ்கேன் மூலம் நோயாளியின் இதய துடிப்பை பரிசோதித்தபோது, லப்டப் சத்தத்திற்கு பதிலாக ஸ்கேனரின் ஸ்பீக்கரில் மெக்சிகன் பாடல் ஒன்று இசைப்பதை கேட்டு மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர். நோயாளியை பரிசோதிக்கும்போது மட்டும் இசை ஒலி கேட்பது எப்படி என்பது மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த சம்பவம் மருத்துவர்களையும், மருத்துவ உலகையும் குழப்பதிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
