“ஆசையாக பீசா சாப்பிட போன சிறுவன்!”... கடைசியில் நேர்ந்த கதி.. ‘மனம் வெதும்பிய தாய்’.. ‘மன்னிப்பு கேட்ட நிர்வாகம்!’
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனின் Plymouth-ல் உள்ள Barbican Leisure Parkல் இருக்கும் பீசா ஹட் உணவகத்துக்கு தங்களது மகள் மற்றும் 11 வயது மகனான Blue Braidle-னுடன் சென்றுள்ளது ஒரு குடும்பம். சிறுவன் Blue Braidleயின் தாயாரான பென்னி, உள்பட அனைவரும் சானிடைஸரால் கைகளை கழுவிக்கொண்டு உணவகத்துக்குச் சென்றனர்.

ஆனால் உணவக நிர்வாக, சிறுவனும் சானிடைஸரால் கைகளை சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது. எனினும் சிறுவனுக்கு அரிப்பு தோல் அழற்சி என்கிற ஒவ்வாமை பிரச்சனை இருப்பதாகவும், அதனால் சானிடைஸர் பயன்படுத்தினால், கைகளில் அரிப்பு உண்டாகி சருமம் வறண்டு போவதாகவும் சிறுவனின் தாய் பென்னி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தங்கள் மகன் ஆர்வத்துடன் எந்த உணவகத்தை அணுகும்போதும் இப்படியான பிரச்சனையை எதிர்கொள்வதாகவும், அவன் மிகுந்த மனவேதனை அடைவதாகவும் குறிப்பிட்ட பென்னி, மாஸ்க் அணிவது போல சில விதிவிலக்குகளை கடைபிடிக்கவும் இடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதே சமயம், பொது சுகாதாரம் கருதி சானிடைஸர் பயன்படுத்துவது முறைதான் எனினும், மாற்று வழிகளை பயன்படுத்துவோருக்கு அந்த விதிவிலக்குகளை அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த குடும்பத்துக்கு நேர்ந்த இந்த சங்கடத்துக்கு வருத்தம் தெரிவித்த பீசா ஹட் நிர்வாகம், வாடிக்கையாளர்களின் சுகாதாரமும், சமரசம் இல்லாத கொரோனா தடுப்பு முறை பின்பற்றும் தங்கள் நிர்வாகக் கொள்கைக்குமே தாங்கள் முன்னுரிமை அளித்ததாகவும், தொடர்ந்து வாடிக்கையாளர்கள் இதனை புரிந்துகொள்வார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார். அதே சமயம் தங்களது நிர்வாக நடைமுறைகளை மறு மதிப்பாய்வு செய்வோம் என்றும் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
