‘கொசு மாஸ்க் போடுறது இல்ல...’ ‘சோசியல் டிஸ்டன்ஸ் பத்தி அதுக்கு தெரியாது...’ - கொசுவால பரவுற தொற்றை நினைவூட்டி பில் கேட்ஸ் எச்சரிக்கை...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக மக்களின் வாழ்க்கை முறையை மாற்றிவரும் கொரோனா காலத்தில் மலேரியா என்னும் பெரும் தொற்றையும் மறந்துவிடக் கூடாது என பில்கேட்ஸ் தன் இணைய தளத்தில் தெரிவித்திருக்கிறார்.
கொரோனா பரவும் முன் மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்தது மலேரியா என்னும் பெரும் தொற்று. இதனை மறுபடியும் நினைவுக்கு கொண்டு வந்துள்ளார் மைக்ரோசாப்டின் அதிபர் பில்கேட்ஸ்.
அவர் தனது இணையத்தில் தெரிவித்துள்ளதாவது, கொரோனா வைரசிற்காவது சமூக விலகலுடன் நாம் இருக்கலாம். ஆனால் கொசுக்களுக்கு சமூக விலகல் எல்லாம் தெரியாது முக்கியமாக கொசு முகக்கவசம் அணிவதில்லை.
உலகிலேயே மிகவும் ஆபத்தான கொலைகாரப் பூச்சியான கொசுக்கள், மலேரியாவைப் பரப்ப நாள் கிழமை பாராமல் பறந்து திரியக்கூடியவை, உலகமே கொரோனா வைரஸ் தொற்றால் இயக்காமல் நின்று இருக்கும் இந்த நேரத்தில், நிற்காமல் தொடர்வது கொசுக்களின் ஆராவாரம் தான் என்கிறார் பில் கேட்ஸ்.
மேலும் தன்னுடைய பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை வாயிலாக மலேரியாவை ஒழிக்க பல ஆய்வுகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். அதில் தற்போது நல்ல முன்னேற்றத்தையும் கண்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய கொரோனா காலத்தில் ஊரடங்கு பின்பற்றப்படும் நிலையில், வசதியற்ற நாடுகளில், கொசு வலைகள், மலேரியா ரத்த சோதனை கிட்டுகள், மலேரியா எதிர்ப்பு மருந்துகள் போன்றவற்றை விநியோகிப்பதில் பெரிய தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் நாம் எப்போதும் கவனமாகவும், முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். மேலும், விரைவிலேயே மலேரியா ஜுரம் பெரிய உயிர்க்கொல்லியாக மாறும் ஆபத்து ஏற்பட உள்ளது என பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.