இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே.. குளிர்கால ஒலிம்பிக்கில் இப்படி ஒரு டெக்னாலாஜி.. அலிபாபா கொடுத்த சர்ப்ரைஸ்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Pandidurai T | Feb 07, 2022 10:47 AM

1000 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒருவரை நேரில் சந்தித்து பேசுவது போன்று உணர்வை தரும் ஹாலோகிராம் தொழில்நுட்பம் மூலம் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் மற்றும் அலிபாபா பேசும் காட்சி வைரல் ஆகி வருகிறது.

beijing winter olympics 2022 on hologram meeting of IOC

கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளைப் போன்றே 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும். முற்றிலும் பனி கட்டிகளால் ஆன மைதானங்களில் நடைபெறும் போட்டி என்பதால் விளையாட்டு என்பதைத் தாண்டி கண்களுக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் விருந்து படைக்கின்றன. குளிர்கால ஒலிம்பிக் தொடர் பெய்ஜிங் நகரில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஹாலோகிராம் தொழில்நுட்பம்

இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் ஆரிஃப் கான் மட்டும் பங்கேற்றுளார். மேலும், கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஒருவருக்கு ஒருவர் சந்திப்பு மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று நடந்த நிகழ்வு ஒன்று உலகத்தையே பிரமிக்க வைத்துள்ளது. அதாவது மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேட்ச், சீனாவின் பிசினஸ் மேக்னட் என்று அழைக்கப்படும் அலிபாபா ஆகியோர் சந்தித்து கொண்டன. இவர்கள் பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்துகொண்டு நேரில் பார்த்து சந்தித்து பேசுவது போன்ற ஹாலோகிராம் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டது.

beijing winter olympics 2022 on hologram meeting of IOC

ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேட்ச்

அலிபாபா சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் இந்த ஹாலோகிராம் தொழில்நுட்ப உதவியுடன் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேட்ச் அலிபாபாவிடம் குளிர்கால ஒலிம்பிக் தொடரின் ஜோதியை மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் கையில் அளிப்பது போன்ற நிகழ்வு கண்களை கவர செய்தது. இது சாத்தியமா என்பதையும் அலிபாபா நிரூபித்து காண்பித்துள்ளார். இதன் பின்னர்,  தாமஸ் பேட்ச் கூறுகையில், "கொரோனா பெருந்தொற்று காலத்தில் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் இருப்பது நம்முடைய நேரடி சந்திப்பை எளிதாக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

க்ளவூட் மீ தொழில்நுட்பம்

அலிபாபாவின் நிறுவனம் இந்த மெய்நிகர் தொழில்நுட்பம் தொடர்பாக சில பணிகளை அசார்த்தியமாக செய்து வருகிறது.  அலிபாபவின் 'க்ளவூட் மீ' என்ற தொழில்நுட்பம் மூலம் இந்த நிகழ்ச்சியை முழுவதுமாக நடத்தியது. அலிபாபா நிறுவனம் தயாரித்துள்ள  'க்ளவூட் மீ' தொழில்நுட்பம் மூலம் பேசுவதற்கென்று ஒரு பூத் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூத்தில் ஒரு கேமரா மட்டும் இருக்கும். அதில் ஒருவர் நின்று பேசி ரெக்கார்ட் செய்ததும், உடனடியாக க்ளவூட் மீ தொழில்நுட்பம் மூலம் இணையத்திற்கு சென்று விடும். பின்னர் இதை ஒரு 4கே திரையில் ஹாலோகிராம் வடிவில் திரையிடப்படுகிறது.

beijing winter olympics 2022 on hologram meeting of IOC

இதனுள் ஒரு  சின்ன நகர்வுள் உட்பட அனைத்தும் வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி தான் தற்போது தாமஸ் பேட்ச் மற்றும் அலிபாபா இந்த ஒலிம்பிக் ஜோதியை மாற்றி கொண்டனர். . மேலும், இதுபோன்ற வெர்ச்சுவல் மீட்டிங் தொழில்நுட்பங்கள் நாளடைவில் மிகவும் பிரபலமாகும் என்று கூறப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல்  ஒலிம்பிக் கமிட்டியுடன் அலிபாபா நிறுவனம்  இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : #WINTER OLYMPICE 2022 #ALIPAPA #HOLOGRAM IOC #VIRTUAL MEETING #BEIJING #CHINA #THOMAS BACH #CLOUD ME #NEW TECHNOLOGY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Beijing winter olympics 2022 on hologram meeting of IOC | World News.