darbar USA others

“ஒரு மாதமாக தீராப் பணி்!”.. “இப்படி ஒரு காட்டுத்தீயை பார்த்ததே இல்லை”.. “அப்பா அழுதார்”.. உருக்கும் பதிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jan 06, 2020 10:05 PM

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீயும் அதில் கருகி உயிரிழந்த காடுகளும், மரங்களும், உயிரினங்களும் உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.

Australian woman shares tired fire fighter photo in social media

இந்நிலையில், தீயணைப்பு வீரர் ஒருவர் கடும் களைப்பில் பற்றி காட்டுக்கு நடுவே 5 நிமிடங்கள் உறங்கும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. ஜென்னா என்பவர் தன் முகநூலில் பதிவிட்டுள்ள பதிவில், ‘இந்தப் படத்தில் இருப்பது என் தந்தைதான். என் சகோதரன், இந்த காட்டில் பற்றி எரியும் தீயை 12 மணி நேரத்துக்கும் மேலாகக் கண்காணித்து வரும் நிலையில், 10 நாள்களாக அவனுடன் சேர்ந்து இந்தப் பணியை மட்டுமே செய்து வந்த என் தந்தை  புல்வெளியில் 5 நிமிடங்கள் தூங்குகிறார். இங்கிருப்பவர்கள் ஒரு மாதத்துக்கு மேலாக கடும் காயங்கள் பட்டதுடன், தீயை அணைத்து வரும் நிலையில், என் குடும்பத்தினர் இங்கு தீயணைக்கும் பணியில் தன்னார்வத்துடன் ஈடுபட்டுள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அப்பதிவில் தன் தந்தை அழுததை அப்பெண் கேட்டதாகவும், இதுபோன்ற ஒரு தீவிபத்தை அவர் பார்த்ததே இல்லை என்றும், இது முடிவதாகத் தெரியவில்லை என்றும், கோடைக்காலம் முடிவதற்கு முன்னரே ஆஸ்திரேலியா தீயில் சிக்கியுள்ளதாகவும், பலரும் தீயணைப்பு பணியில் தன்னார்வத்துடன் ஈடுபட்டுள்ளதால்தான் தன்னால் உயிருடன் இருக்க முடிவதாகக் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags : #AUSTRALIAFIRE #AUSTRALIA