Annatha Others ua

ஏன் மேட்ச்ல 'இந்தியா டீம்' கையில 'கருப்பு பட்டை' கட்டிட்டு விளையாடினாங்க...? - 'பிசிசிஐ' வெளியிட்டுள்ள தகவல்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Nov 09, 2021 09:02 PM

நமீபியா அணி மற்றும் இந்திய அணி மோதிய நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் கரும்பட்டை அடித்துக்கொண்டு விளையாடிய சம்பவம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

indian players played with a black belt for ind vs nam match

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டதோடு இந்திய அணி இந்த தொடரில் இருந்து வெளியேறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த கடைசி லீக் போட்டியில் இந்திய அணி நமீபியா அணியை எதிர்கொண்டது.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்தெடுத்தார். இந்திய அணியின் பிரமாதமான பந்து வீச்சு காரணமாக நமீபியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை எடுத்தது.

அதன்பின் களமிறங்கிய இந்திய அணி சுமார் 15 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்தது. அதோடு இந்திய வீரர்கள் விளையாட்டு மைதானத்தில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடி வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்து குழப்பத்தை ஏற்படுத்தியது என்று தான் சொல்லவேண்டும்.

இதுகுறித்து எழுந்த கேள்விகளுக்கு எல்லாம் தற்போது தெளிவு ஒன்று கிடைத்துள்ளது. பொதுவாக இந்திய அணி வீரர்கள் ஏதாவது ஒரு துக்கத்தை அனுசரிக்க கருப்புப் பட்டை அணிந்து விளையாடுவார்கள். அதுபோல நேற்றைய ஆட்டத்திலும் துக்கத்தை அனுசரிக்கத்தான் அவர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடியுள்ளனர்.

indian players played with a black belt for ind vs nam match

71 வயதான டெல்லி பயிற்சியாளர் தரக் சின்ஹா கடந்த  சில நாட்களுக்கு முன்னர் நுரையீரலில் ஏற்பட்ட கேன்சர் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரின் துக்கத்தை அனுசரித்து, அவரை கௌரவிக்கும் விதமாக இந்திய வீரர்கள் நேற்றைய போட்டியில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஏனென்றால் இப்போது இந்திய அணியில் இருக்கும் பல வீரர்கள் தரக் சின்ஹா அவர்களின் பயிற்சியின் கீழ் பயின்றுள்ளனர். குறிப்பாக, ரிஷப் பண்ட், ஆசிஷ் நெக்ரா, ஆகாஷ் சோப்ரா, ஷிகார் தாவன் போன்ற பல இந்திய வீரர்கள் இவரின் கீழ் பயின்று உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

Tags : #BLACK BELT #INDIAN PLAYERS #IND VS NAM

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Indian players played with a black belt for ind vs nam match | Sports News.