'கொரோனாவால இதுவரை 22 கோடி பேர் வேலை இழந்து நிக்றாங்க...' 'அதுவும் இந்த பிராந்திய மண்டலத்தில் மட்டும்...' - அதிர்ச்சியளிக்கும் சர்வே முடிவு...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஏசியன் டெவெலப்மென்ட் வங்கி சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சுமார் 22 கோடி இளைஞர்கள் வேலையிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![asia pacific region 22 crore youths lost their jobs asia pacific region 22 crore youths lost their jobs](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/asia-pacific-region-22-crore-youths-lost-their-jobs.jpg)
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் அனைத்து நாடுகளிலும் பொருளாதார தடை ஏற்பட்டுள்ளது. மேலும் பல பெரிய வணிக நிறுவனங்களும், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கி (asian development bank) நடத்திய 'ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் கோவிட் -19 இளைஞர் வேலைவாய்ப்பு நெருக்கடியை சமாளித்தல்' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட சர்வேயில் ஏராளமான இளைஞர்கள் வேலை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் கிட்டத்தட்ட 22 கோடி இளம் தொழிலாளர்கள் குறுகிய காலத்திலேயே தங்களது வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர். இந்த கொரோனா காலகட்டத்தில் தொழில்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களை விட இளைஞர்கள் தான் தங்களின் வேலையினை உடனடியாக இழக்கின்றனர் என்ற தகவலும் அந்த ஆய்வில் வெளியாகியுள்ளது.
மேலும் இளைஞர்களின் வேலையின்மையை போக்கும் வகையில் வேலைவாய்ப்பு திட்டங்களை உருவாக்கவேண்டுமென அரசுக்கு ஆய்வு முடிவுகள் வலியுறுத்துகின்றன.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)