'நிலைம கைய மீறி போயிடுச்சு!.. சம்பள பாக்கிய வாங்கிட்டு நீங்களே ராஜினாமா பண்ணிருங்க'!.. 1,60,000 ஊழியர்களின் நிலை என்ன!?
முகப்பு > செய்திகள் > வணிகம்பிரபல விமான உற்பத்தி நிறுவனமான போயிங் (Boeing) இரண்டாவது முறையாக ஆட்குறைப்பு (layoff) நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக உலக அளவில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இது விமான உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களைக் கடுமையாக பாதித்துள்ளது.
இந்நிலையில், விமான சேவைகளில் முன்னணி நிறுவனமான போயிங், இரண்டாம் கட்டமாக தன்னுடைய ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளது. ஊழியர்களுக்கு மீதமிருக்கும் ஊதியம் மற்றும் Benefits ஆகியவற்றை இணைத்துக் கொடுத்து, வேலையைவிட்டு நீக்கப்போவதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, "ஆட்குறைப்பு என்பது எங்களுக்கு மிகவும் சங்கடமான செயல் என்றாலும், நிறுவனத்தின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு அதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அப்போது தான் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் நிறுவனத்தை வழிநடத்த முடியும்" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இன்னும் 3 வருடங்களுக்கு விமான சேவைகளின் சந்தை மதிப்பு குறைவாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே, இரண்டு மாபெரும் விமான விபத்துகளை ஏற்படுத்தியிருந்த Boeing 737 MAX விமானம், அதன் சேவை 1 வருடமாக நிறுத்தப்பட்டுள்ளதால், போயிங் நிறுவனத்திற்கு நிதிச்சுமை கூடிக்கொண்டே போகிறது. சுமார் 1,60,000 ஊழியர்களைக் கொண்ட போயிங், அதில் 10 விழுக்காடுக்கும் அதிகமான ஊழியர்களை வேலையைவிட்டு நீக்க முடிவு செய்துள்ளது.
இதையொட்டி, ஊழியர்களை தாமாக முன்வந்து வேலையை ராஜினாமா செய்யுமாறு போயிங் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

மற்ற செய்திகள்
