"வேலைய விட்டு தூக்கிட்டாங்க!.. அவங்களே வந்து என்னைய மறுபடியும் சேர்த்துக்க வைக்கிறேன்"..! ஐ.டி. ஊழியர் போட்ட 'மாஸ்டர்' பிளான்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கின் போது பறிபோன வேலையை திரும்பப்பெறுவதற்காக, தான் பணிபுரிந்த கம்பெனியின் database-ஐ கம்ப்யூட்டர் என்ஜினியர் ஹேக் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மஜ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விகேஷ் ஷர்மா. இவர் M.Sc(IT) முடித்துவிட்டு, மெடிக்கல் பில்லிங் (Medical billing) தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சீனியர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிவந்தார்.
கொரோனா ஊரடங்கின் போது, சம்பள விவகாரத்தில் அவருக்கும், அவர் சார்ந்த நிறுவனத்துக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. அதைத் தொடர்ந்து, அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதற்காக அந்நிறுவனத்தை பழிவாங்க முடிவு செய்து, கம்பெனியின் database-ஐ ஹேக் செய்து, நோயாளிகளின் தரவுகளை டெலிட் செய்துள்ளார். அவ்வாறு செய்யும்போது, தன்னுடைய தேவையை உணர்ந்து, மீண்டும் தன்னை நிறுவனம் பணியமர்த்தும் என்று திட்டம்போட்டுள்ளார்.
அவ்வாறு ஹேக் செய்யும்போது எதிர்பாராதவிதமாக மாட்டிக்கொண்டார். பிறகு, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி போலீஸில் புகார் அளிக்கவே, விகேஷ் ஷர்மா கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே காவல்துறையின் விசாரணையில், 18,000 நோயாளிகளின் தரவுகள் நீக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.

மற்ற செய்திகள்
