'போதும் பா சாமி!.. இதுக்கு மேல தாங்காது!'.. BENCH EMPLOYEES-ஐ வேலையைவிட்டு கிளப்பும் ஐடி நிறுவனங்கள்!.. BPO நிலையும் மோசம்!.. அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா தாக்கத்தால் இந்தியாவில் தற்போது வரை சுமார் 1 கோடி பேருக்கு வேலை பறிபோயிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில், 2007-2009 காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் சுமார் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை பாதித்திருந்த நிலையில், அதைவிடப் பன்மடங்கு பாதிப்பினை கொரோனா ஏற்படுத்தியிருக்கிறது.
கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மார்ச் 25 முதல், சுற்றுலா மற்றும் டிராவல்ஸ் துறை - 55,00,000, ஹோட்டல் மற்றும் விடுதி - 38,00,000, ஆட்டோமொபைலில் - 10,00,000, ரிட்டைல் (Retail) - 2,00,000, ஐடி - 1,50,000, Startup - 1,00,000, BFSI - 30,000 என மொத்தம் 1,07,80,000 பேருக்கு வேலை பறிபோய், வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
அதிலும் குறிப்பாக, ஐடி துறையில் தற்போது வரை, 1,50,000 பேர் வேலை இழந்துள்ளனர். இது Call center-இல் பணியாற்றுவோரை கடுமையாக பாதித்துள்ளது. BPO வேலைகள் Work from home முறையில் ஆங்காங்கே செயல்பட்டு வந்தாலும், முறையான தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால், புதிய ப்ராஜெக்ட்ஸ் க்ளைன்ட்களிடமிருந்து வருவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை 2020இல் இருந்து, பிரபல ஐடி நிறுவனமான CTS, அதன் Bench employees பலரை வேலையைவிட்டு நீக்கி வருவதாக moneycontrol செய்தி வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து, மற்றொரு ஐடி நிறுவனமான Capgemini-யும் தற்போது Bench employees-ஐ பணி நீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.
இது ஐடி ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
