மசூதிக்குள் இருந்த சிவலிங்கம்..?.. நீதிமன்றம் போட்ட பிறப்பித்த உத்தரவு.. உச்சகட்ட பரபரப்பில் வாரணாசி!
முகப்பு > செய்திகள் > இந்தியாவாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், மசூதிக்குள் இருக்கும் ஒசுகானா பகுதிக்கு நேற்று சீல் வைத்துள்ளது நீதிமன்றம். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த இருக்கிறது.
Also Read | 3 ஆம் வகுப்புதான்.. ஆனா மொத்த பஞ்சாங்கமும் விரல் நுனியில.. தமிழக சிறுவனுக்கு கிடைத்த கௌரவம்..!
கியான்வாபி மசூதி
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில். இதன் அருகே இருக்கும் கியான்வாபி மசூதி முகலாய பேரரசரான அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மசூதியின் வளாகத்துடைய வெளிப்புறச் சுவற்றில் உள்ள சிங்கார கவுரி அம்மன் சிலைக்கு ஆண்டுக்கு 5 முறை பூஜை நடத்த அனுமதி வழங்கக்கோரி வாரணாசி நீதிமன்றத்தில் பெண்கள் 5 பேர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மசூதியில் வீடியோ ஆதாரத்துடன் கள ஆய்வு செய்ய கடந்த வாரம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மசூதி நிர்வாகம் மனுத்தாக்கல் செய்யவே, கள ஆய்வை 17 ஆம் தேதிக்குள் நடத்திமுடிக்க உத்தரவிட்டனர் நீதிபதிகள்.
ஆய்வு
கடந்த 3 நாட்களாக கியான்வாபி மசூதியில் நடைபெற்றுவந்த ஆய்வு நேற்று முடிவடைந்தது. இந்த ஆய்வில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் கலந்துகொண்டனர். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான போலீசார் அந்த மசூதி அமைந்துள்ள பகுதி முழுவதும் குவிக்கப்பட்டனர். இதனிடையே, இந்து பெண்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிசங்கர் ஜெயின், மசூதிக்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். மசூதியில் கை, கால் கழுவும் ஒசுகானா பகுதியில் சிவலிங்கம் இருந்ததாக தகவல் வெளியான நிலையில், அந்தப் பகுதிக்கு சீல் வைக்க உத்தரவிட்டார் நீதிபதி.
அதேநேரத்தில் மசூதிக்குள் 20 பேர் மட்டுமே தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவர் என தெரிவித்த நீதிபதி, கையகப்படுத்தப்பட்ட இடத்தில் மத்திய பாதுகாப்பு போலீஸாரை அமர்த்தும் படியும் இப்பகுதியின் பாதுகாப்பிற்கு மாவட்ட நிர்வாகமே பொறுப்பு எனவும் அறிவித்திருக்கிறார். இதனிடையே ஒசுகானா பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது நீரூற்று கல் எனத் தெரிவித்திருக்கிறது மசூதி நிர்வாகம்.
விசாரணை
இதனிடையே கியான்வாபி மசூதியில் நடைபெற்றுவந்த களஆய்விற்கு தடை கேட்டு மசூதியின் நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி உச்ச நீதிமன்றத்தை அனுகியிருந்தது. இதற்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்ற அமர்வு, அந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரிப்பதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று கியான்வாபி மசூதி நிர்வாகம் தொடர்ந்த மனு விசாரணைக்கு வருவதால் மொத்த வாரணாசியும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8