இதனால பெரிய 'ஆபத்து' இருக்கு...! 'டெல்லிய போல மூணு மடங்கு பெரிய ஐஸ் கட்டி ஒண்ணு...' - தெரிய வந்துள்ள 'அதிர்ச்சி' தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்துள்ள சம்பவம் பல கடற்கரையோர பகுதிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது எனலாம்.
மனிதர்களின் வாழ்வு முறை பூமியின் வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணியாக அமைகிறது. இதனால் பூமியில் இருக்கும் பிற உயிரினங்களும், கடல்மட்டங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பூமியின் தென் பகுதியில் உள்ள மிகப்பெரிய கண்டமான அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் நிறைந்து காணப்படும். தற்போது புவி வெப்பமயமாதலை இந்த பனிப்பாறைகள் தடுத்து வருகின்றன.
இந்நிலையில் அண்டார்டிகாவில், மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து கடலில் மிதக்கத் தொடங்கியுள்ளது. இது சுமார் நான்காயிரத்து 320 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள மிகப்பெரிய பனிப்பாறை ஆகும். ஏ-76 என பெயரிடப்பட்டுள்ள அந்த பாறை 170 கிலோ மீட்டர் நீளமும், 25 கிலோ மீட்டர் அகலமும் உடையது.
இந்த பனிப்பாறை புது டெல்லி நகரத்தைப் போன்று, 3 மடங்கு பெரிதாக இருக்குமாம். பனிப்பாறை உடைவு சூழல் ஆர்வலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் பனிப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருகத் தொடங்கி, கடல் நீர்மட்டம் அதிகரித்து பலகடற்கரையோர பகுதிகள் நீரினுள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.