VIRAL PHOTO: சந்தேகமே இல்ல...! 'இதான்'யா இந்த வருஷத்தோட 'பெஸ்ட்' ஃபோட்டோ...! 'அந்த பிஞ்சு முகத்துல தெரியுற எக்ஸ்பிரஷன் சான்ஸே இல்ல...' - உலக அளவில் டிரெண்டிங்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு ஆப்கான் சிறுமியின் புகைப்படம் உலக அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

தாலிபான்கள் நாட்டை கைப்பற்றி இருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி மீட்பு விமானம் மூலம் பெல்ஜியம் நாட்டிற்கு சில ஆப்கான் மக்கள் சென்றுள்ளனர்.
ஆப்கானில் இருந்து தப்பி பெல்ஜியம் விமான நிலையத்தில் இறங்கிய ஒரு ஆப்கான் சிறுமி அந்நாட்டின் ஏர்போர்ட்டினுள் இருக்கும் தார் சாலையில், அதுவரை இருந்த இறுக்கம் எதுவும் இல்லாமல் சுதந்திரமாக துள்ளலுடன் நடந்து சென்ற ஃபோட்டோ தான் உலக மக்கள் அனைவரையும் ஈர்த்துள்ளது.
உலக அளவில் டிரெண்ட் ஆகி வரும் இந்த புகைப்படத்தை மெல்ஸ்ப்ரோக் ராணுவ விமான நிலையத்தில் வைத்து ராய்ட்டர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஜோஹன்னா ஜெரான் என்பவர் எடுத்துள்ளார். இந்த ஃபோட்டோவில் சிறுமி தனது முகத்தில் புன்னகையுடன் இருப்பதை காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் துள்ளலுடன் நடப்பது விடுதலை அடைந்த உணர்வை பிரதிபலிக்கிறது.
முகத்தில் புன்னகை மற்றும் உற்சாகத்தோடு துள்ளிக் குதித்துக் கொண்டே கையில் ஒரு சிறிய பேக்கை எடுத்து கொண்டு பெல்ஜியத்திற்குள் நுழைகிறாள். அந்த சிறுமிக்கு முன்பாக இருவர் செல்கின்றனர். அவர்கள் சிறுமியின் பெற்றோராக இருக்க வாய்ப்புள்ளது.
இந்த புகைப்படத்தில் காணப்படும் பெரியவர்கள் மற்றும் குழந்தையின் முகங்களில் காணப்படும் உணர்வலைகள் வியக்க வைக்கிறது. எந்த சந்தேகமும் இல்லாமல் இந்த வருடத்தின் சிறந்த புகைப்படம் என இதை சொல்லலாம்.

மற்ற செய்திகள்
