'கண்ணுக்கு முன் தாய்க்கு நடந்த கொடூரம்'... 'மனசு பூரா இருந்த ஆத்திரம்'... 'பழிக்குப் பழி வாங்க இளம் பெண் செஞ்ச சம்பவம்'... பரபரப்பை ஏற்படுத்திய திரில் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்த உலகத்தில் யாரையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அது யாராக இருந்தாலும் அவர்களுக்கு மன வலிமை என்று ஒன்று இருந்தால் எதையும் சாதித்துக் காட்ட முடியும் என நிரூபித்து இருக்கிறார், காமர் குல் என்ற இளம் பெண்.

ஆப்கானிஸ்தான், கோர் மாகாணத்தில் கெரிவே என்ற கிராமம் உள்ளது. தாலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த இந்த பகுதியில் காமர் குல், தனது தாய், தந்தை மற்றும் தம்பியுடன் வசித்து வந்துள்ளார். ஜூலை 17 - ந் தேதி திடீரென கெரிவே கிராமத்தைச் சுற்றி வளைத்த தாலிபான்கள், கிராம மக்களில் அரசுக்கு ஆதரவானவர்கள், அரசுக்குத் தகவல் அளிப்பவர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், கிளர்ச்சிக்கு ஒத்துழைக்காதவர்கள் எனப் பலரையும் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொன்றார்கள். நடு இரவில் என்ன நடக்கிறது என்று யூகிப்பதற்குள் காமர் குல் வீட்டுக் கதவையும் தீவிரவாதிகள் தட்டினர்.
நள்ளிரவில் வீட்டின் கதவு தட்டப்படுவதால் சற்று அதிர்ச்சி அடைந்த காமர் குல்வின் தாய் கதவைத் திறந்துள்ளார். அப்போது வீட்டின் வெளியே தாலிபான்கள் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்து அதிர்ந்த காமர் குல்வின் தாய், கதவை உடனடியாக சாத்தியுள்ளார். இதைச் சற்றும் எதிர்பாராத தாலிபான்கள் கதவை உடைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே சென்றுள்ளார்கள். அப்போது காமர் குல்வின் தாய் கதறிய நிலையிலும் அவரை கொடூரமாகச் சுட்டுக் கொன்றார்கள். தாய்க்கு நடந்த கொடூரத்தை மறைந்திருந்து பார்த்த காமர் குல், தன்னால் அம்மாவைக் காப்பாற்ற முடியவில்லையே என வாயை மூடிக்கொண்டு அழுகையைக் கட்டுப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையே வீட்டின் மற்றொரு அறைக்குச் சென்ற தாலிபான்கள், அங்கு மறைந்திருந்த காமர் குல்வின் தந்தையையும் சுட்டுக் கொன்றார்கள். தனது தம்பியுடன் மறைந்து'இருந்ததால் காமர் குல் உயிருடன் தப்பினார். தனது குடும்பத்தை நாசம் செய்தவர்களைப் பழிக்குப் பழி வாங்கத் திட்டமிட்ட காமர் குல் அதற்கான சரியான தருணத்திற்காகக் காத்துக் கொண்டு இருந்துள்ளார். தாலிபான்களைப் பழிவாங்க ஏ.கே 47 ரகத் துப்பாக்கியைத் தயார் செய்த காமர், தீவிரவாதிகளின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்தை நாசம் செய்த தாலிபான் தெய்வ தீவிரவாதிகளின் இருப்பிடத்திற்குச் சென்ற காமர், அந்த தீவிரவாதிகளைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றார்.
தனது குடும்பத்தை நாசம் செய்தவர்களைத் தக்க நேரம் பார்த்து இளம் பெண் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அந்த பெண்ணின் தைரியத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்கள். கையில் ஏ.கே 47 துப்பாக்கியுடன் காமல் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அப்பாவி மக்களைக் கொடூரமாகக் கொல்லும் தீவிரவாதிகளுக்கு இதுதான் சரியான தண்டனை எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்
