செல்போன், கரண்ட் ரெண்டுமே எனக்கு தேவையில்ல...! எதற்காக இப்படி ஒரு முடிவு...? அதிர வைக்கும் காரணம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்இன்றைய சூழலில் மனித இனம் முற்றிலும் எலக்ரானிக் மற்றும் கதிர்வீச்சு தொடர்புடைய சாதனங்களுக்கு அடிமையாகி வருகின்றோம். இது ஒரு வகையில் விஞ்ஞான வளர்ச்சி என்றாலும் முற்றிலும் அடிமையாகி விடுவதுதான் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இவ்வாறான மொபைல் மற்றும் மின்சாரம் தனக்கு வேண்டாம் என இருக்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த புருனோ ஃ பாரிக். பிரிட்டன், நார்த்தம்டன்ஷையரில் உள்ள ரோத்வெலை சேர்ந்த 48 வயதான புருனோவுக்கு மின்சாரம் மற்றும் மொபைல் கதிர்வீச்சினால் ஏற்படும் ஒருவித அலர்ஜி ஏற்படுகிறது. மருத்துவ துறையில் இந்த நோய் எலக்ட்ரோ மேக்னடிக் ஹைபர்சென்சிட்டிவிட்டி என்று குறிப்பிடப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்தவித குறையும் இல்லாமல், நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த புருனோ, தற்போது வெறும் 31 கிலோவுடன் காட்சியளிக்கிறார்.
தன் அழற்சி குறித்து கூறும் புருனோ, 'நானும் எல்லோரையும் போல் சாதாரண வாழ்க்கையைத்தான் வாழ்ந்தேன். நான் ஒரு கிரேஹவுண்ட் (Greyhound ) பயிற்சியாளர். எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். எனது இந்த அலர்ஜி நோயால் டிவியிலும், பத்திரிக்கைகளிலும் உள்ளவர்கள், எங்களை ’5 ஜி இடியட்ஸ் என்று அழைக்கிறார்கள். ஒரு மொபைல் போன் அல்லது மின்சார உபகரணம் வைத்தால் எனக்கு என்ன நடக்கிறது என்ற கஷ்டம் எனக்கு தான் தெரியும். எலெக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் மொபைல் சிக்னல்கள் மனிதர்களைப் பாதிக்காது என்று யாராலும் சொல்ல முடியாது, அதற்கு நான் ஒரு வாழும் ஆதாரமாக இருக்கின்றேன்' எனக்கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
