எங்களால முடியல...1 லட்சத்து 39 ஆயிரம் பேரை 'வீட்டுக்கு' அனுப்ப போறோம்... 'ஷாக்' கொடுத்த நிறுவனங்கள்!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனாவால் வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உலகம் முழுவதும் பெரும்பாலோனோர் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரிட்டனில் வேலைநீக்கம் செய்வது அதிகரித்து வருகிறது.

அங்குள்ள சுமார் 1778 வணிக நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் இருந்து 20 அல்லது அதற்கு மேற்பட்டவர்களை வேலைநீக்கம் செய்திட அனுமதிக்குமாறு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன. இதனால் மொத்தமாக 1 லட்சத்து 39 ஆயிரம் பேருக்கு வேலை பறிபோகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் சிறு நிறுவனங்கள் இடம்பெறவில்லை.
இதனால் வேலை இழப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக உணவகங்கள், ஏர்லைன்ஸ், ரீடெய்ல் செக்டர் ஆகிய துறைகளில் அதிகம் பேர் வேலையை இழக்கலாம். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 5 மடங்கு அதிகமாகும். ஏனெனில் கடந்த ஆண்டு 345 நிறுவனங்களில் இருந்து 24,000 பேர் மட்டுமே பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
