'என்னாச்சு? எல்லாம் நல்லா தான போயிட்டிருந்தது!.. யார் கண்ணுபட்டுத்துனு தெரியல!'.. பாரத் பயோடெக் 'அதிர்ச்சி' தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅவசர அவசரமாக கோவேக்ஸின் (covaxin) தடுப்பு மருந்தை விற்பனைக்கு கொண்டு வர விருப்பமில்லை என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தான கோவேக்ஸின், மனிதர்களிடம் செலுத்தி சோதனை செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக, இந்த மருந்து வரும் ஆகஸ்ட் 15 முதல், பொதுமக்களுக்கு கிடைக்கும் எனப் பல்வேறு செய்திகள் உலாவந்தன.
இந்நிலையில், இது குறித்து பேசிய கோவேக்ஸின் மருந்தை தயாரிக்கும் நிறுவனமான பாரத் பயோடெக்கின் தலைவர் கிருஷ்ணா எல்லா, "கொரோனா வைரஸ் எங்கள் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதற்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். ஆனால், மக்களின் உயிரும், மருந்தின் தரமும் எங்களுக்கு முதன்மையானது. அறைகுறையான மருந்தை அவசரமாகக் கொடுத்து மக்களின் உயிருடன் நாங்கள் விளையாட விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "உலக நிறுவனங்கள் எங்களை கண்காணித்து வருகின்றன. நாங்கள் இன்னும் மேலான ஆய்வுகளை செய்ய இருக்கிறோம். கோவேக்ஸின் மருந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும். இது வெறும் மருந்தல்ல, நமது நாட்டின் பெருமையும் கூட." இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவேக்ஸின் தடுப்பு மருந்து முதற்கட்ட மனித பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
