"புதுசா ஆளுங்கள எறக்க போறோம்... ஆனா, அதுக்கு முன்னாடி உள்ளுக்குள்ள இத செய்ய வேண்டியது இருக்கு..." அறிவித்த முன்னணி ஐ.டி 'நிறுவனம்'!!!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா தொற்று காரணமாக உலகின் பல முன்னணி நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. பல ஐ.டி நிறுவனங்கள் அடுத்த மூன்று மாதங்களில் பணியமர்த்தலுக்கு தயாராகி வரும் நிலையில் முன்னணி ஐ.டி நிறுவனமான டெக் மஹிந்திராவும் விரைவில் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளது.
ஆனால் அதற்கு முன்னதாக, தங்களது நிறுவனத்தின் பயன்பாடு திறனை மேம்படுத்த முடிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களுக்கு இடையில் டெக் மஹிந்திராவின் பயன்பாடு ஒரு சதவீதம் குறைந்துள்ளது. இது தொடர்பாக சமீபத்திய பேட்டியில் டெக் மஹிந்திராவின் CFO மனோஜ் பட் கூறுகையில், 'எங்களது முதல் கவனம் சரிந்து போயுள்ள எண்களின் செயல்பாடு திறனை மேம்படுத்துவதே ஆகும்' என்றார். டெக் மஹிந்திரா நிறுவனம் மட்டுமில்லாது இன்போசிஸ் உட்பட பல முன்னணி ஐ.டி நிறுவனங்கள் கொரோனா தொற்று காரணமாக, தங்களின் பயன்பாடு சிக்கல்களால் தவித்து வருகிறது.
அனைத்து நிறுவனங்களும் தற்போதைய நிலைமையை சீர் செய்ய வேண்டி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போதைய சிக்கல்களை சரி செய்த பின்னர், எங்களது நிறுவனம் புதிதாக பணியமரத்தலுக்கு தயாராகும் என டெக் மஹிந்திராவின் CFO மனோஜ் பேட் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.