ப்பா.. காரைக்குடி இளைஞர் செய்த காரியத்த பாத்தீங்களா.. ரூ.20 கோடியாமே ! என்னன்னு பாருங்க!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிவகங்கை: காரைக்குடியில் 20 கோடி ரூபாய் மோசடி வழக்கில் பங்குச் சந்தை தரகரான எம்.பி.ஏ பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
இந்தியப் பங்குச்சந்தை மிக மிகப் பெரியதாகிவிட்டது. வர்த்தகம் பரவலாகிவிட்டது. பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகிவிட்டது. பெரிய குழுமங்களின் பலங்களிலும் ஒன்றுக்கு ஒன்று பெரிய வேறுபாடுகள் இல்லை. மேலும் அவர்கள் சூழ்நிலைகள், தேவைகள் வேறுபட்டனவாக இருக்கின்றன. இந்த நிலையில், எம்பிஏ பட்டதாரி ஒருவர் பங்கு சந்தையில் லாபம் ஈட்டி தருவதாகக் கூறி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி டி.டி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சோம கணேசன் (35). பொறியியல் , எம்.பி.ஏ பட்டதாரியான இவர்; கேப் ஸ்டாக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி பங்குச் சந்தை தரகராக இருந்துள்ளார். இவர் உறவினர்கள் , படித்த நண்பர்களிடம் பங்கு வர்த்தகம், ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் அதிக அளவில் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி அவரது உறவினர்கள், நண்பர்கள் பணம், நகை பல்வேறு வகையில் 61 பேரிடம் 20 கோடிக்கு ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில், சோமகணேசன் தலைமறைவானார். இதற்கிடையில் தன்னிடம் வாங்கிய பணத்தை சோம கணேசன் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார் என காரைக்குடியைச் சேர்ந்த சரவணன் அளித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, சோமகணேசன் மனைவி வள்ளியம்மை தனது கணவரை காணவில்லை என கூறி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், நேற்று சோமகணேசன் நீதிமன்றத்தில் ஆஜரானார். பிறகு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சோமகணேசனை மோசடி வழக்கில் காரைக்குடி வடக்கு போலீசார் கைது செய்து காரைக்குடி அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.