'மின்னல் தாக்கி சரிந்த மின் கம்பம்...' 'மின் கம்பிகளுக்கு இடையில் சிக்கிய பொதுமக்கள், சம்பவ இடத்திலேயே...' நெஞ்சை உறைய செய்யும் கோர நிகழ்வு...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்பிரிக்க நாடான காங்கோ பகுதியில் மழையின் காரணமாக மின்சார கம்பிகள் அறுந்து விழுந்ததில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால் அப்பகுதியே கவலையில் ஆழ்ந்துள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாட்டின் காங்கோ குடியரசின் பிரஸ்விலி மாகாணத்தில் உள்ள கின்டெலி பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ததால் அங்கிருக்கும் இரண்டு உயர்மின் அழுத்த கம்பிகள் மீது மின்னல் தாக்கியது.
மின்னல் தாக்கியதால் மின்சார தூண்கள் சரிந்து கீழே விழுந்தன. அதில் இருக்கும் கம்பிகளில் மின்சாரம் காணப்பட்டது. அப்போது அந்த பகுதியில் இருந்த மக்களின் மேல் மின்சார கம்பி விழுந்தது. இந்த நிகழ்வில் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி மக்கள் துடிதுடித்து இறந்தனர்.
சற்றும் எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் அந்த இடத்தில் இருந்த 20 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
