மறுபடியும் மொதல்ல இருந்தா?... குணமாகி சில மாதங்கள் கழித்து 'மீண்டும்' தொற்றிய கொரோனா... அதிர்ந்து போன சீனா!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் ஆட்டிப்படைக்கும் கொரோனா கடந்த வருடம் சீனாவில் இருந்து பரவியது. ஆனால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனா இடம்பெறவில்லை. தற்போது கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டறியும் முயற்சிகளில் பல நாடுகளும் இறங்கி உள்ளன.
இந்த நிலையில் சீனாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த இருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதலில் கொரோனா தோன்றிய ஹூபெ மாகாணத்தில் 68-வயதான பெண் ஒருவருக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தான் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து குணம் அடைந்து இருந்தார்.
அதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் ஷாங்காய் மாகாணத்தை ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து குணம் அடைந்து இருந்தார். அவருக்கு மீண்டும் அறிகுறிகள் எதுவும் இன்றி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது இதற்கான காரணம் குறித்து சுகாதார நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைபவர்கள் உடலில் உருவாகும் ஆண்டிபாடிகள் சீக்கிரமே மறைந்து விடுவதாக தரவுகளில் தெரிய வந்துள்ளது.