"முதல் ஐபோன்'ல இதுனால தான் அந்த ஆப்ஷன் இல்லயா??.." 15 வருசத்துக்கு அப்புறம் தெரிய வந்த சுவாரஸ்ய தகவல்
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்டிஜிட்டல் யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், நாளுக்கு நாள் பல வசதிகளை உள்ளடக்கிய மொபைல் போன்கள் புதிதாக வெளியான வண்ணம் உள்ளது.
அந்த வகையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மீது, ஏராளமான மக்களுக்கு இன்றளவிலும் பெரிய அளவில் விருப்பம் உள்ளது.
அடிக்கடி புது புது அப்டேட்கள் மற்றும் புது புது ஐபோன் மாடல்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாவதையும் நாம் பார்த்திருப்போம்.
முதல் ஐபோன் குறித்த சுவாரஸ்யம்
இந்நிலையில், முதல் ஐபோன் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐ போனை அதன் உரிமையாளர் ஸ்டீவ் ஜாப்ஸ் 2007 ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தார். முதல் ஐபோன் விற்பனையைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் புதுமையான ஐபோன் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வருகிறது.
கட், காபி, ஃபேஸ்ட் ஆப்ஷன்கள்
முன்னதாக, முதல் ஐபோன் உருவாக்கப்பட்ட சமயத்தில், அதில் கட், காப்பி மற்றும் பேஸ்ட் உள்ளிட்ட ஆப்ஷன்கள் இடம்பெறவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது பற்றி, சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தகவல் தெரிய வந்துள்ளது. முதல் ஐபோன் தயாரிக்கும் நேரத்தில் பணியாற்றிய கென் கெசிண்டா என்ற இன்ஜினியர், இதற்கான காரணத்தை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"ஐபோன் கீ போர்டு, ஆட்டோ கரெக்ஷ்ன் மற்றும் டெக்ஸ்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றில் வேலை செய்வதில் நான் அதிக கவனத்துடன் இருந்ததால், கட், காபி, ஃபேஸ்ட் உள்ளிட்ட ஆப்ஷன்களை செயல்படுத்துவதற்கான நேரம் எனக்கு அமையாமல் போனது. இதனால் தான், ஆப்பிளின் முதல் ஐபோனில் அந்த ஆப்ஷன்கள் இடம்பெறவில்லை. அதன் பின்னர் வந்த மாடல்களில் தான் கட், காபி, பேஸ்ட் உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்பட்டது" என தனது ட்வீட்டில் கென் குறிப்பிட்டுள்ளார்.