RRR Others USA

ஒரே ஒரு சின்ன CHANGE.. 600 கோடி லாபத்தை அள்ளிய ஆப்பிள் கம்பெனி.. ஓஹோ.. இதுதான் அந்த சீக்ரெட்டா..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Madhavan P | Mar 22, 2022 01:11 PM

ஒரே ஒரு சிறிய மாற்றத்தின் மூலமாக ஆப்பிள் நிறுவனம் ரூபாய் 600 கோடி வரை கூடுதல் லாபம் அடைந்துள்ளது.

Apple Earned $6.5 Billion By Removing Chargers From iPhone Boxes

அவங்க இல்லான்னா என்ன.. 3 தரமான ப்ளேயர்ஸை குறைஞ்ச ரேட்டுக்கு எடுத்திருக்கோம்.. சிஎஸ்கே கோச் சொன்ன சூப்பர் தகவல்..!

டெக்னாலஜி துறையில் ஜாம்பவானாக கருதப்படும் ஆப்பிள் நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபோன் 12 சீரிசை அறிமுகம் செய்தது. எதிர்பார்த்ததைப் போலவே இந்த போன்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. இப்போது விஷயம் அதுவல்ல, அந்த போன்களின் பெட்டிகளில் சிறிய மாற்றம் ஒன்றினை ஆப்பிள் செய்தது. இதன் மூலம்  அந்த நிறுவனத்திற்கு கூடுதலாக 600 கோடி ரூபாய் வரை லாபம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாற்றம்

ஐபோன் 12 போன்கள் அடங்கிய பெட்டியில் சார்ஜர் மற்றும் இயர் போன்களை அந்த நிறுவனம் நீக்கிவிட்டது. அதுமட்டுமல்லாமல் இனி விற்பனையாகும் அனைத்து ஐபோன் பெட்டிகளின் அளவை குறைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டதாக ஆப்பிள் நிறுவனம் அப்போது தெரிவித்திருந்தது. இதன் மூலம் வழக்கமான அளவை விட 70% கூடுதலாக ஐபோன்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியும் என அந்த நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Apple Earned $6.5 Billion By Removing Chargers From iPhone Boxes

என்ன காரணம்?

ஐபோன்கள் அடங்கிய பெட்டிகளின் அளவை குறைப்பதன் மூலம் இந்த பெட்டிகளை தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்களின் அளவு குறைவதோடு கார்பன் உமிழ்வும் கட்டுப்படுத்தப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்தது. மேலும் இந்த முடிவினால் மின்னணு கழிவுப் பொருட்களின் அளவும் குறைக்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் காரணம் தெரிவித்திருந்தது.

லாபம்

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த வித்தியாசமான முடிவின் மூலம் வழக்கத்தைவிட அதிகமான லாபத்தை ஈட்டியுள்ளது அந்நிறுவனம். 2020 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரையில் உலகம் முழுவதும் 190 மில்லியன் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. பெட்டிகளின் அளவை குறைத்ததால் ஒரு பெட்டிக்கு 35 டாலர் வரை அந்த நிறுவனத்துக்கு லாபம் கிடைத்திருக்கிறது.

Apple Earned $6.5 Billion By Removing Chargers From iPhone Boxes

சார்ஜர் மற்றும் இயர் போன்களை தனியாக விற்பனை செய்ததன் மூலம் 296 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. ஆக மொத்தமாக ஆப்பிள் நிறுவனம் செய்த இந்த மாற்றத்தின் காரணமாக அந்த நிறுவனத்திற்கு 6.5 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 600 கோடி ரூபாய்) கூடுதலாக கிடைத்துள்ளது.

தோனிக்கு அப்புறம் சிஎஸ்கே கேப்டன் இவர்தான்.. மூத்த வீரரை கை காட்டும் ஆகாஷ் சோப்ரா.. வாய்ப்பு இருக்கா..?

Tags : #APPLE #REMOVING CHARGERS #IPHONE #IPHONE BOXES #EARN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Apple Earned $6.5 Billion By Removing Chargers From iPhone Boxes | Technology News.